பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௨௮

முன்னுரை


முன்னைய உரையாசிரியர்கள்.சிலவர் கண்ட பொருளுரைகளைச் சற்று உற்றுப்பாருங்கள்!...

மணக்குடவர்: "உலகத்தவர் தம் மக்களைத் தம்முடைய பொருள் என்பவர்.”

பரிதி: "தமக்கு அழியாத உடைமையாவார் புதல்வர்.”

பரிப்பெருமாள்: "தம் பொருளாவார் தம் மக்கள்,”

பரிமேலழகர்: "தம் புதல்வரைத் தம்முடைய என்பர் அறிந்தார்”

கவிராசர்: "தம் புதல்வரைத் தம்முடைய பொருள் என்பர்”

பழைய உரையாசிரியர் (1): "தமக்கு அழியாத உடைமையாவது புதல்வர்"

பழைய உரையாசிரியர் (2) : "தம் புதல்வரைத் தம் பொருள் என்று சொல்லுவர் பெரியார்”

கா. சுப்பிரமணியனார்: "மனிதர் தம்முடைய குழந்தைகளைத் தம்முடைய அருமையான உடைமை (செல்வம்) என்பர்.”

திரு.வி.க: மு.வ. தம் மக்களே தம் பொருள் என்பர் பெற்றோர்:

நாகை சொ. தண்டபாணியார்: (பரிமேலழகரை அடி சேர்ந்துரைக்கும் பொருள்)

இராமாநுசக் கவிராயர் : "தம்முடைய செல்வம் எனப்படுவது தம் மக்களே.”

புலவர் குழந்தையார்: "தம் மக்களைத் தம் பொருள் என்பர் அறிவுடையோர்”

அப்பாத்துரையார்: "குடும்பம், சமுதாயம் ஆகியவற்றின் உண்மையான செல்வமாவது இனப்பண்பு வாய்ந்த புதல்வர் - புதல்வியர்களே"

பாவாணர்: "தம் மக்களைத் தம் செல்வம் எனப் பாராட்டுவர் பெற்றோர்"

இலக்குவனார்: "தம் மக்களைத் தம் செல்வம் எனப் பாராட்டுவர் அறிந்தோர்”

இம் மேற்குறித்துக் காட்டியுள்ள பதினைவரின் உரைகளையும் கண்டு விட்டீர்களா?. . . ஐயா அவர்களின் உரையை இப்போது காணுங்கள்: . . . "தம் பொருள் என்ப தம் மக்கள்: "(இவ்வுலகில்) தம்முடைய பொருள் என்று உரிமை கொண்டாடுவதற்கு உரியவர்கள் தாம் பெற்று உருவாக்கிய தம் மக்களே! "

கருத்து முழுமையதாக விளங்கும் நிலையில் - சிக்கலற்ற தெளிவான அளவான மீமெல்லிய மலர்ச்சியுடன் எளிய உரையாப்பில் வார்த்தெடுக்கப் பெற்றிருக்கும் இந் நிழலுரைப் போக்கைப் பொழிப்பு உரை கூறும் இலக்கணமுறை கொண்டமைந்த ஒரு நிறை சான்றாகவே