௩௮
முன்னுரை
கூறிய கூறே - இப் பேறும்!
இதுவரை வந்து வரிசை கொண்டுள்ள உரைகள் அனைத்தினுக்கும் மேம்பட்ட நுண்மையதும் - திண்மையதும் ஒண்மையதும் - தெண்மையதும் - வன்மையதும் - முன்மையதும் - முதுவதும் - புதுவதும் - வண்மையதும் உண்மையதுமாகித், திருவள்ளுவர் வாயுரைக்கெனவே வாய்த்துள்ள தகவுரை என்பது இம் மெய்ப்பொருளுரையே!
இத் தகவுரையானது, எதிர் வரவுள்ள விளக்கப்பேருரைக்கு, - ஓர் அகவுரையே! இவ்வகவுரையாகிய மகவுரைக்குத் (பெருமையுரை) தாயுரையே திருவள்ளுவர்பெருமானின் வாயுரை ஆகும்! அவ்வாயுரையுள் தோய்ந்துறைந்து நம் ஐயா அவர்கள் உரைத்து வரும் இச்செயல் தொடக்கம் . . . இனித் தொடர்ந்து நடக்கும்! . . . அது நம் அறிவுப்பசியையும் அடக்கும்; அதே கணத்தில் - நம் பகைக் கணத்தின் கொட்டத்தையும் எற்றியடக்கும்! அன்று, நம் இனம் விழிக்கும்! எதிரியின் இனமும் - இனும் இன்ன செய்வதெனத் தெரியாது விழிக்கும்! . . .
மீண்டும் கூறுகின்றேன்! இதுவே, - திருவள்ளுவர் வாயுரைக்குரிய தகவுரையாகும்! இதுவே என்னின் தகவுரையுமாகும்!
தஞ்சை
அன்பன்,
25.1.1993
ப. அருளி