பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௫௨

முன்னுரை


- இலக்கணக்கொத்து.

"வற்புறுத்த ஓர்பொருளை வள்ளுவனார் பத்துமுறை
சொற்பொருத்தி ஒதும் துணிவு”

- சிவப்பிரகாசர்.

"திருவள்ளுவ தேவர் வாய்மை யென்கிற
பழமொழியை ஒதியே உணர்ந்து"

- திருப்புகழ்

"வால்வளை யுலவும் வீதி
மயிலைவள் ளுவன்சொல் யார்க்கும்
மேல்வழி யுணர்த்திக் கீழ்மை
விலக்குநல் வேத மாமே!"

- புலவர் புராணம்-

"வள்ளுவர்செய் திருக்குறளை
மருவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி"

- மனோன்மணியம் -

"மொழிசுருங்கல், பொருள்விளங்கல், மொழியஇனி(து)
ஆதல், நல மொழிபு ணர்த்தல்,
வழியமைஒ சையிற்பொலிதல், ஆழ்ந்திருத்தல்,
முறைநிறுவல், மலைவு தீர்தல்,
பொழிவிழுமி யதுபயத்தல், காட்டாதல் -
இப்பத்தும் பொலிய வாய்ந்த
கழிபொருளும் கருதணியும் நோக்குமிடந்
தொறும்கிடந்து களிப்புச் செய்ய,

மையேறும் எழில்மதுரை மாநகரத்(து)
அருட்புலமை மாட்சி யார்முன்
கையேறு திருமூலஆ கமச்சோதி
மறைமுளைத்த கனிவாய் விண்டு
பையேறு மணிபொருமோர் துதிகவிசொற்
றிடப்பலரும் பரவிப் போற்ற
வையேறு திருக்குறள்என் றொருநூல்செய்து
உலகு-உவப்ப அளித்தா னாக!”

- பெரும்பேராசிரியர் மீனாட்சிசுந்தரனார்