பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௭௬

முன்னுரை 


'மனத்துக்கண் மாசு இலாதது, அறம்' (34)

'அழுக்காறு பொறாமை), அவா (பேராசை), வெகுளி (கடுஞ்சினம், இன்னாச்சொல் நல்லதல்லாத, நல்லது விளைவியாத சொல்) ஆகிய இந் நான்கும் இழுக்காமல் இயன்றது அறம்' (35)

'அன்றறிவாம் என்னாது அறம் செய்க (36)

'விழ்நாள் படா.அமை நன்று அறம் ஆற்றுக (38)

'அறத்தால் வருவதே இன்பம் (39)

'செயற்பாலது அறனே (40)

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை (49).

'அறனிழுக்கா இல்வாழ்க்கை (48)

'அறத்தாற்றின் இல்வாழ்க்கை' (46)

'அன்பும் அறனும் . . . . இல்வாழ்க்கை (45)

'அறத்திற்கு அன்பு சார்பு (76)

'முகனமர்ந்து இன்சொல் வழங்குவது; அகனமர்ந்து ஈவது அறம் - (92)

'நல்லவை நாடுதல்; இனிய சொல்லுதல், அறம்' (96)

அல்லவை தவிர்த்தல், நல்லவை நாடுதல், அறம் (95).

'பண்பின் தலைப்பிரியாமை, அறம் (97)

'சிறுமையுள் நீங்குதல், அறம் (98)

செய்யாமல் செய்யும் உதவி, அறம்' (101)

இனி, காலத்தால் செய்யும் உதவி (102)

'பயன் துரக்காது செய்யும் உதவி (103)

துன்பத்தில் துப்பு துணை ஆதல் (106)

விழுமம் துன்பம் துடைத்தல் (107)

'பகுதியால் உறவு, நட்பு, நொதுமல் வேறுபாடுகள்)

இன்றித் தகுதியால் ஒழுகுதல் (111)

- போன்ற அனைத்து ஒழுகலாறுகளும் அறம் என்றே நூலுள் கூறப்பெற்றுள்ளன. மேலும் ஆசிரியர் கூறுதல் காண்க.