பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்

அக


★குரவோர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கில் கழுவாயும் உளவென
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்திகொன் றோர்க்கு உய்தி இல்லென
'அறம்' பா டிற்றே'

- புறம் 34; 1 - 7.

★இவ்வடியைப், ‘பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்’ என்று உவே. சாமிநாதர் திருத்தி வெளியிட்டார்.

- என்னும் ஆலந்தூர் கிழார் பாட்டடிகளையும்,

'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு' - 110.

- என்னும் குறட்பாவையும் இணைவைத்துப் பொருள் கூறினார், பரிமேலழகர்.

இங்கு, புறப்பாடலை ஓர் எடுத்துக் காட்டாகக் கூறலாமே யன்றி, அதில் கூறப்பெற்ற அறம் என்னும் சொல் திருக்குறளையே குறித்ததாகக் கொள்ளப் பெறலாகாது. அதற்கு முன்னிருந்த 'அறம்' என்னும் பெயர் கொண்டதாகக் கருதப்பெறும் வேறொரு தமிழ்த் தனி நூலையே அது குறித்ததாகும் என்பதற்கு அப் புறநானூற்றிலும், திருக்குறளிலும், வேறு சில தனிப் பாடல்களிலும் பல சான்றுகள் உள என்று கூறி, அவற்றை அறிஞர் சிலர் சுட்டியும் காட்டியுள்ளனர். அவை வருமாறு:

'அறம் புகழ்ந்த வலை சூடி' - புறம்:166:14.
(வலை - ஒர் அணிகலன்).

'அறங்குறித் தன்று பொருளா குதலின்'

- புறம்:362:10.


'அறம் பொருள் கண்டார் வாய்ச் சொல்' -141.

'அறம் கூறும் ஆக்கம் தரும்' -183.

'அந்தணர் நூற்கும் அறத்திற்கும்' - 543.

'அறம்உரைத் தானும் புலவன்; முப் பாலின்
திறம்உரைத் தானும் புலவன்-குறுமுனி
தானும் புலவன்; தரணி பொறுக்குமோ
யானும் புலவன் எனின்'

- பொய்யாமொழிப் புலவர்.

'ஏரணம் உருவம் யோகம்