பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

86


திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார் 86

கக. வானின்று உலகம் வழங்கி வருதலால்

தானமிழ்தம் என்றுணரற் பாற்று 11

பொருள் கோள் முறை :

வான் நின்று உலகம் வழங்கி வருதலால் தான் அமிழ்தம் என்று உணரல் பாற்று

பொழிப்புரை வானம் (ஒரு தாய் போல் நிலையுற்றிருந்து, தான் பயந்த உலகத்திற்கும், அதன் உள்ளார்ந்த உயிர்களின் தோற்றத்திற்கும், நிலைப் பிற்கும், அவ்வப்பொழுது அவை கேட்டலின்றித் தானே மழையூட்டுதல் தந்து உதவிவருவதால், அம்மழை (அனைத்துப் பயிர்களுக்கும் உயிர் களுக்கும்) தாய்ப்பால் ( போன்றது) என்று உணர்ந்து கொள்ளும் பான்மையுடையது. சில விளக்கக் குறிப்புகள்:

1. நின்று - நிலையுற்றிருந்து. 2. வழங்கி - வழங்குதல் தந்து வழங்குதல் கேட்டலின்றித் தானே

தருதல் - இவ்வுலகில் நிலையுற்றிருந்து வழங்குதல் தன்மையுடையவர்

எவ்வுயிரினத்தும் தாயே என்க. - தொடக்கத்தும் அவளே உயிரைத் தோற்றுவித்தற்கும் பாலூட்டி வளர்த்தற்கும் உரியளாகையாலும், மழையை அமிழ்தம் (தாய்ப்பால்) என்றமையாலும், தோன்றா உவமை தாயென்று தோற்றிற்று. 3. அமிழ்தம் - 'அம் 'அம் என்பது, குழந்தை தாய் முலையில்

பாலருந்தும் ஒர் ஒலிக்குறிப்பு அம்மம் - தாய் முலை; அம்மு முலைப்பால்; அமுது அமுதம் - அமிழ்தம் - முலைப்பால். அம்மை - முலைப்பால் ஊட்டும் தாய், அம்மா - தாய் (விளி; - உலக மொழிகள் அனைத்திலும் தாயைக் குறிக்கும் மூலச் சொல் - (அவ்வவ் விடத்திற்கும் இனத்திற்கும் மொழிக்கும் ஏற்ப இச் சொல்

சிற்சிறிது மாறுபட்டு வழங்கினும் இதுவே என்க. * - அமிழ்தம் முதலில் தாய்ப்பாலைக் குறித்துப் பின் பிற அருந்து

பால்களையும் குறித்தது. மற்று, அமிழ்தம் அமிர்தம் ஆகாது, அது கற்பனையாகலின். உயிர்கள் உடலொடு தோன்றி மலர்ச்சியுறுவதற்கு முதல் உலக