பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

92


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 92

கால் என்று தொக்கு நின்றது. வாரி வளம் குன்றின் ஏரின் வளமும் குன்றும் என்றார்.

8. ஏரின் உழாஅர் என்றவர், உழவு அதிகாரத்தில் சுழன்றும் ஏர்ப்பின்னது

கரு.

உலகம் என்பதாலும், மழையின்மையால் ஏரும், அதன் பின்னவாய ஏனைத் தொழில்களும், அவை பொருட்டாய உலகமும், அலகுடை நிழலால், பல குடை நீழலும் தங்குடைக்கீழ்க் காணும் அரசும், இல்லறமும், துறவறமும் ஆய பல்வகை அறக் கூறுகளும் நடைபெறா என்றவாறு, C;

கெடுப்பது உம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பது உம் எல்லாம் மழை. 雷5

பொருள் கோள் முறை இயல்பு

பொழிப்புரை : உலகுவாழ் உயிரினங்களுக்கு எதிராகத் தான் பொழியாது நின்று அவற்றைச் சீரழித்துக் கெட வைப்பதும், அவ்வாறு சீரழித்துக் கெட்ட அவற்றுக்குத் துணையாக மீண்டும் வேண்டிய அளவு பெய்து, அவற்றை அழிவினின்று மீட்டெடுத்து நிலைபெறச் செய்வதும், ஆகிய அழித்தல், ஆக்கல், அளித்தல் என எல்லாவற்றையும் செய்ய வல்லது மழையே ஆகும்.

சில விளக்கக் குறிப்புகள்:

1. சார்வாய் -துணையாக சார்வாக நின்று அழிவினின்று மீட்டெடுப்பது

என்றதால், எதிராக நின்று கெடுத்தது வருவிக்கப் பெற்றது.

2. கெடுத்தல் - இல்லாமற் செய்தல்,

3. எல்லாம் - என்றது அழித்தல், ஆக்கல், அளித்தல் என யாவும்

வல்லது என்று உணர்த்துவான் வேண்டி இதனை, இவ்வதிகாரத்தின் இறுதிக் குறளாகக் கொள்வர் திருவிக

இதனால், விளைவு குறைந்து, உயிர்கள் கெட நேர்ந்தால், மீண்டும் மழையையன்றி அவற்றை மீட்பதற்குத் துணையாக நிற்பார்