பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 - அ - 1 -2 - வான்சிறப்பு -2

விரிந்து பரந்து ஆழ நிற்கும் நீடிய கடலும், தன் இயற்கைத் தன்மையில் குறைவுபட்டு விடும்.

சில விளக்கக் குறிப்புகள்:

1 தடிந்த எழிலி என்பது தடிந்தெழிலி எனத் தொக்கு நின்றது. கடல் நீரைக் குறைத்து எழுந்த நீர் மேகம் என்பது பொருள். தடித்து என்று கொள்வது அவ்வளவு பொருந்துவதன்று. தடிந்து என்பதற்கு மின்னி என்றும் பொருள் கொள்ளலாம். 2 நல்குதல் - பெற்றதைத் திரும்பத் தருதல். 3 நெடுங்கடல் - பார்த்தற்கும், கடத்தற்கும், அளத்தற்கும் அரிய நீடிய

கடல்.

4. நீர்மை குன்றுதல் - நீர் அளவிலும் நீர்மையிலும் அஃதாவது தன் இயல்பாந் தன்மையிலும் குறைவுபடுதல். இயல்பாந் தன்மை தானும் தன்னுள் வாழும் பயிரும் உயிரும் கனியும் மணியும் அளவிற் குறைதல். நில விளைவின்றிக் கடல் விளைவை நம்பினார்க்கு அதுவும் இல்லாமற்போகும் என்றவாறு. 5. இக்குறள் கருத்தினையொட்டிக் கூறிய,

'கலங்கு தெண்டிரை மேய்ந்து கனமழை .

琴演纥略始码感姆球测 வானிரைத்து மணந்து சொரிந்தவே' - சீவக சிந் 3233.

"மாக்கடல் முகந்து . ոտտոատաս செறிந்த இம் மழை - Ep. ii2. - என்னும் பாடலடிகள் இங்கு நினைவு கூர்ந்து ஒப்பிட்டு மகிழத் தக்கன. - .

O

க.அ. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. 18

பொருள் கோள் முறை:

வானம் வறக்குமேல், ஈண்டு, வானோர்க்கும் சிறப்பொடு பூசனை செல்லாது. -