பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

96


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 96

பொழிப்புரை: வானில் (மழைக்குரிய மேகங்கள் சூழாதும் அதனால் மழை பொழியாதும் வறட்சியான வெறுமை தோன்றுமானால், இவ்வுலகத்து, (வான் உறைவதாகக் கருதப்பெறும் தெய்வங்கட்கும், (பொதுவானும் சிறப்பானும் வேளையும் நாளும் பருவத்தும் செய்யப்பெறும் பூசனை முதலிய வழிபாடுகள் (ஆக்கமின்மையானும், நம்பிக்கை குறைதலானும், நிகழ்த்தப் பெறா. -

சில விளக்கக் குறிப்புகள்:

1. வானம் இடவாகு பொருளாய் மழையைக் குறிக்குமேனும், வறட்சி தோன்றுவது கூறப்பெற்றதால், இடப்பொருளாய் வானத்தையே குறிக்கும். 2. வானோர் - வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்புற மறைந்தும் மக்கள் மனங்களில் தெய்வங்களாக நின்று கொண்டாடப் பெறுவோர். வையத்துள் எனத் தொடங்கும் திருக்குறளை (50) ஒர்க, முருகன், சிவன், திருமால் முதலிய தெய்வங்களும் அத்தகையோரே. 3. பூசனை - பூசை பூசு என்னும் வினையடியாகப் பிறந்த சொல்.

பூ செய் பூ வழிபாடு பூசையானது என்பாரும் உளர். "பூசை அல்லது பூசனை சமசுக்கிருதச் சொல் என்பார் உண்டு. ஆனால் அச்சொல்லும் சொற்றொடர்புப் பொருள் மரபும் ஆரிய இனத் தொடர்பற்றவை. பூசை அல்லது பூசனை என்ற சொல்லின் பொருள் தெய்வ உருவத்துக்கு நெய் முதலிய பூசி வழிபாடாற்றுதலும், பூவழிபாடு செய்தலும் ஆகும். இந்திய ஆத்திக ராகிய சைவ, சமண, வைணவ சமயத்தவரிடையே தான் பூசை பெருவழக்காயுள்ளது. ஆரியரின் இருக்கு முதலிய வேதங்களிலே பலியாட்டு வேள்வியன்றிப் பூசை செபதபங்கள், துறவு, ஊனுண்ணாமை, உருவவழிபாடு ஆகிய எதுவும் காணப்படவில்லை." என்பர் அறிஞர் கா. அப்பாத்துரையார். . மணிவிளக்கவுரை பக். 512. 4. மழை பொழியாது வானம் வறக்குமேல், நிலமும் வறண்டு, பூ பழம், நெல், நெய் முதலிய கிடையாமற் போதலாலும், நம்பிய தெய்வங்கள் மழையைப் பொழிவியாது, அவற்றின்மேற் கொண்ட நம்பிக்கை தளருமாதலானும், அவற்றைப் பாராட்டியெடுக்கும் பூசனைகள் நிகழ்த்தப் பெறாவென்றார். பூவே புகை சாந்தம் கண்ணம் விளக்கு இவற்றால் புனைதல் நாளும் ஏவா இவை பிறவும் பூசனை

- சீவக சிந், 1547 O