பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

98


திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார் 98

தானம் - கேளாமல் தருவது. தருமம் - கேட்டுத்தருவது. கொடை - பொதுவின் கொடுப்பது ஈகை, ஈதல் - தனக்குரியனவற்றையும் தருவது.

நோற்றிட்டு, உடனாக ஐம்பொறியும் வென்றார்க்கு உவந்திதல் தானமாகும் என்று சீவக சிந்தாமணியார் (1546) கூறுவது போல், நோற்பார்க்கு மட்டுமே ஈதல் தானம் என்பது சமணர் கொள்கை 5. தவம் : தன் உடல் நலனுக்கும், மகிழ்விற்கும் அறிவுக் கூர்மைக்கும் செய்யப்பெறும் நோன்மை முயற்சி. நோன்மை நோற்றல் கடைப்பிடி, அஃது இருக்கை, மனவொருமை, மெய்யறிமுனைவு முதலிய விரிவு நிலைகள் கொண்டது. இவற்றின் விரிவும் விளக்கமும் நுண்பொருண்மையும் நிறைவுரை நூலுள் காண்க) அறிஞர் மு. வரதராசனார், பிறர் பொருட்டுச் செய்யும் தானமும் தம் பொருட்டுச் செய்யும் தவமும் என்பர். 6. ஒழுக்கம் காத்தல் தாவாத்தவம் (சீவக. 1543) என்பது ஒரு கருத்து. மழைகுன்ற வளங்குன்றும் வளங்குன்றக் கொடை குன்றும் கொடை குன்றப் பிறர் நலமும் மகிழ்வும் குன்றும் பிறர் நலமும் மகிழ்வும் குன்றத் தம் நலமும் வளமும் குன்றும் - என்க. தானம் பிறர் சார்பு நிலை; தவம் தற்சார்பு நிலை. தவம் வாழ்வியல் பொது, துறவுக்கே

உரியதன்று.

O

உ0. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு. 20

பொருள் கோள் முறை

உலகு நீரின்று அமையாது; எனின் வான் இன்று யார் யார்க்கும் ஒழுக்கு அமையாது.

பொழிப்புரை உலகமும் அதிலுள்ள உயிர்களும் அவற்றின் இயற்கையும் செயற்கையும் ஆம் தன்மைகளும் நீரில்லாமல் நிலைத்திரா. (விரைவில் அழிந்துபடும், இயற்கை செயற்கை நிலைகளே அவ்வாறாகும்) எனின், வான்மழை இல்லாமல் உயிர்களுட் சிறந்த மக்களும், மக்களுட் சிறந்த