பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

102


திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் - 102

முனைப்பானும், அதனினும் மேம்பட்ட மெய்யறிவானும், மனவுணர்வுத் தெளிவானும், பிறரினும் வேறுபட்டு விளங்கி, புலனுணர்வுகளை அடக்கி, இவ்வுலகில் இல்லறம் முதலியவற்றால் வரும் இன்பங்களைத் தவிர்த்து, நீக்கிக்கொண்டு, அவற்றினின்று அவ்வாறு தங்களை நீக்கிக்கொள்ளாமல், அவற்றுளே ஈடுபட்டு, அனைத்து நிலையானும் இன்புற்றும் துன்புற்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் பிறமக்கள் மேல், அன்பும் அருளும் கொண்டு, அவர்களுக்கு அறமும் அறிவும் வாழ்வியலும் புகட்டி, அவர்களொடு இணைந்து நின்றும், அதே பொழுது தனித்து நின்றும், நாடுறை அறவோர்களாக, இல்லறம் மேற்கொள்ளாத துறவோர்களாக, முனைவர்களாக, அறிவர்களாக, அன்பும் அருளும் கொண்ட அந்தண்மையாளர்களாக வாழ்ந்து, மக்கட்கு வழிகாட்டிகளாக விளங்கும் பொதுநலப் பெரியோர்களின் பெருமைகளைக் கூறி, அவர்களை உணர்ந்து மதிக்கவும், பின்பற்றவும், இதில் ஆற்றுப்படுத்துவார்.

நீத்தார் - கானுறை துறவியரல்லர் நாடுறை துறவோர்; அறிவர்; அந்தனர்.

பெருமை - உயர்ச்சி, சிறப்பு. இது ஒருவரின் சொல், செயல், வாழ்க்கை, அறிவு, கொள்கை, தொண்டு முதலியவற்றின் சிறப்பியல் கூறுகளைப் பிறர் மதித்துப் பெரிதுபடுத்திக் கூறும் தகைமையாலும் அதன் காலங்கடந்த நிலைப்பாலும் புலப்படுவதாம் என்க.

- இனி, அத்தகைய நிலையில் உள்ளவர்கள் தவிரப் பிறர், தமக்கும் பிறர்க்கும் ஓர் இணைப்பை உருவாக்கிக்கொள்ளும் பொழுது, இயற்கையின் உயிரியக்க இயல்பின் ஒர் ஒழுங்கை முறைப்படுத்திக்

காட்டுவதே இதற்கு அடுத்ததான 'அறன் வலியுறுத்தல் அதிகாரம்

என்க. O

உக ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு. 21

பொருள் கோள் முறை : இயல்பு

பொழிப்புரை : ஒழுக்கம் உடையவராக இருந்து, அறவுணர்வு மேம்பட்டு உலக இன்ப நாட்டங்களைத் தவிர்த்துக் கொண்டவரின் பெருமை, அவரின் சிறந்த நோக்கத்தைச் செயற்படுத்துவதன் தேவையைக் கொண்டதாக