பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 அ - 1 . 3 - நீத்தார் பெருமை - 3

இருத்தல் வேண்டும். (அல்லாக்கால் அவர் அவற்றை நீத்தலில் பெருமையில்லை) - என்பதே அறிவு நூல்களின் தேர்ந்த முடிவாகும்.

சில விளக்கக் குறிப்புகள்:

1. ஒழுக்கத்து நீத்தார் - என்றதால், ஒழுக்கமின்மையால் நீத்தல் பெருமைக்குரியதாகாது என்றார். அவ்விழுக்கத்து நீத்தாரைக் கூடாவொழுக்க, அதிகாரத்துக் குறிப்பார், ஒழுக்கமின்மையால் நீத்தல் என்பது, இல்லறத்துக் கீழ்மையால், கொலை, களவு காரணத்தால், வறுமையால், மறைந்தொழுகும் பூசையால், அச்சத் தேவையால், பிற மன வெறுக்கையால் வேறுவழியன்றி நீத்தலை மேற்கொள்ளுதல். . இவ்வாறின்றி ஒழுக்கத்து நீத்தார் பெருமைக்குரியர் என்றார். ஒழுக்கத்து என்பதற்குப் பரிமேலழகர், ஒழுக்கத்தின்கண்ணே நின்று துறத்தலாவது என்று தொடங்கிக் கூறும் வருணாசிரமப் பொருள் துளியும் பொருந்துவதன்று, அஃது அறிவியலுக்கும் மாந்தச் சமநிலைக்கும் ஏற்றதன்று ஆகலானும் குலப்பிரிவை வலியுறுத்துவதாகலானும் என்க. - இனி, விழுப்பத்து என்பதற்கு உத்தமமாகிய பத்து என்று பொருள் கூறிச் சமயஞ்சார்ந்து விளக்குவதும் ஏற்புடைத்தன்று. 2. விழுப்பத்து வேண்டும் - அப்பெருமைக்குரிய நீத்தலும் தலைசிறந்த ஒரு நோக்கத்தின் பொருட்டாதல் வேண்டும். பெருமையுடையவர் ஆற்றுவார் (975) எனப் பெருமை அதிகாரத்தும் வலியுறுத்துவார். 3. பனுவல் - பொதுவாக நூல்கள் எனப் பொருள்படாது, அறிவு நூல்களைச் சுட்டும் சிறப்புச் சொல், ஈண்டு அறிவு நூல்களின் ஆசிரியர்களைச் சுட்டியது. பகுத்துண்டு (322) என்பதினும் இவ்வுத்தி பின்பற்றப்பெறுவது காண்க. பஞ்சினால் நூற்கப்பெறுவது நூலாவது போல், அறிவினால் நூற்றலும் நூல் பொத்தகம் ஆயிற்று. அதே போலும் பன்னலால் (பஞ்சினால்) நூற்கப்பெறுவதும் பனுவாலாயிற்று. இனி, அதன் மேலும், பன்னுதல் பல வகையிலும் ஆராய்ந்து தெளிதல் என்னும் பொருளடிப்படையில், பனுவல் அவ்வாறு செய்த நூலைக் குறித்தது என்க. இச்சொல் இந்நூலுள் இவ்வொரே விடத்தில் பயலப்பெற்றதும் இதன் சிறப்பையுணர்த்தும் என்க. . 4. ஒழுக்கம் - ஒழுகு' என்னும் வேரடியாகப் பிறந்த சொல்.

ஒழுகுதல் - நீர் மேலிருந்து ஒழுக்கொழுக்காய்க் கீழிறங்குதல், அஃது அளவானும் நிறையானும் நேர்மையானும் ஒரு படித்தானதால், அதனின்று ஒழுக்கப்பொருள் கிடைத்தது என்க.