பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105

அ - 1 - 3 நீத்தார் பெருமை - 3

3.

4.

வையத்து இறந்தாரை - இவ்வையத்தின்கண் இதுவரை பிறந்து மறைந்தாரை. - எண்ணிக் கொண்ட அற்று - அவர்களை எண்ணிப் பார்த்து, அவர்களுள் நினைவால் கொள்ளப்பெற்ற தன்மையுடையவரைப் போல்வது. என்னை? இவ்வுலகத்து இதுகாறும் பிறந்து இறந்தாரை எவராலும், எத்தகையர், எத்தன்மையினர், எவரெவர் என்று எண்ணிப் பார்த்தல் இயலாது. ஆனால், அவர்களுள் இவ்வையத்து மக்களால் காலங்காலமாக நினைவில் கொள்ளப்பெறுவோர் ஒரு சிலராவர். அத்தகையோர் இவ்வாறு மக்கள்நலங் கருதி அறமேற்கொண்ட அறவோரும் துறவோரும் அறிவரும் என்க. எனவே அத்தகைச் சான்றோரே துறந்தார் பெருமைக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் தன்மையுடையவர் என்றார். பிறரெல்லாரும் பிறந்தும் பிறவாரே போல் சுவடின்றித் தேய்ந்தாராகலான், பெருமைக்குரியராகார் என்க. - இனி இதற்கு அத்துறவோரது பெருமை இவ்வுலகத்து இதுவரை பிறந்து இறந்தாரை எண்ணிக் கணக்கிடுவதைப் போல்வது என்று கூறி, அது போல் கூறுவதற்கு இயலாதது என்று முடித்துப் பொருள் கூறுவது பொருந்தாது. இயலாத ஒன்றைத் துணைக் கூறின் என்று

கூறார் ஆகலானும், அவ்வியலாத தன்மைக்கும், பிறந்திறந்தாரை

எண்ணிக்கொள்வதென்னும் உவமை சிறுபிள்ளைத்தும் நகைப்பிற்குரியதும் ஆகலானும், இனி, அத்தகு செயலை எண்ணிக் கண்டற்று' என்னாமல், எண்ணிக் கொண்டற்று எனக் கூறினார் ஆகலானும், அப்பொருள் புன்மையானதும் பொருந்தாததுமாம் என்க. இதற்குப் பாவாணர் பொருளும் இதன்வழித்தாம் என்க.

- இனி, இதற்கு, ஒழுக்கத்து நீத்தார் வழிநின்று, அவரால் இயக்கப்படும் துறவோரின் பெருமையை அளந்து மதிப்பிடுவதானால் (அது), நிலவுலகிலே பிறந்து வாழ்ந்து இறந்துவிட்ட பலதலைமுறை உயிர்களையும் எண்ணித் தொகைப்படுத்தியது போன்ற அவ்வளவு பெரிய அளவினது ஆகும், என்னும் அறிஞர் அப்பாத்துரையார் பொருளும் மருளினதேயாம் என்று விடுக்க, .

--.-- எனவே, இறந்தாருள் ஒருசிலர் வையத்தின் நினைவுக்கு உளராதல் உண்மையாவது பற்றியும், அவர்கள் அத்தகைய அறமேற் கொண்டு தந்நலம் துறந்தோராக விருப்பதும் உண்மையாம் பற்றியும், இறந்தாரை எண்ணி, அவர்களுள் நினைவிற் கொள்ளப்பெற்றவர் தன்மை போல்வது என்பதே அறிவுப் பொருத்தமும் இயல்புப் பொருத்தமும் உடைய பொருள் என்றும் இதுவே பொருந்துவதென்றும் கொள்க