பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

106


திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார் 106

அவ்வாறு எண்ணிக்(நினைவிற் கொண்டவர்களுள் மாவீரர், புத்தர் முதலாயினார் நூலாசிரியர் காலத்தும், ஏசு முதலாயினார் அவரது பிந்திய காலத்தும் நிற்றல் காண்க.

O

உங். இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு. 23.

பொருள் கோள் முறை இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்

. பெருமை உலகு பிறங்கிற்று.

பொழிப்புரை இயற்கை இயங்கியலின் படி, இங்குள்ள அறிவறி பொருள்கள், உணர்வறி பொருள்கள், புலனறி பொருள்கள் ஆகிய துண்மையும் திண்மையும், பொதுவும் சிறப்பும் வாய்ந்த பொருள்கள் அனைத்திலும் அமைந்துள்ள இரண்டிரண்டு வகைத் தன்மைகளையும், அவற்றின் மெய்ப்பயன்களையும் ஒருவர் அறிவால் தெரிந்துணர்ந்து, அவற்றுக்கிடையில் அறவாழ்வே பெரிதென்று தெளிந்து, தேர்ந்து, அதை மேற்கொண்டவரின் பெருமையே உலகின்கண் ஒளிபெற்று விளங்கும் தன்மையுடையது. -

சில விளக்கக் குறிப்புகள் :

1. இருமை வகை. பூண்டார்: இயற்கை இயங்கியலின் படி, இவ்வுலகத்திலுள்ள அறிவால் அறியப்பெறும் நுண்பொருள்களும், உளத்தின் உணர்வினால் அறியப்பெறும் நுண்பொருள்களும் ஐம்புலன்களால் அறியப்பெறும் பருப்பொருள்களும் இரண்டிரண்டு வகைகளாகவே அமைந்துள்ளன. - . அவ்வாறு அமைந்துள்ள இரு வகைகளையும் அவற்றின் இயல்புகளையும் பயன்களையும் ஒருவர் தெரிந்து கொண்டு, உணர்ந்து, இவ்வுலகில் இன்னின்ன நிலையில் இஃதிதுதான் சிறந்தது எனத் தெளிந்து, அதுபோல் மாந்த வாழ்க்கையிலும், பிற துய்ப்பு வகை வாழ்க்கைமுறை யாவற்றினும், பொதுநலம் பேணும் அறவாழ்க்கையே சிறந்தது என்று தேர்ந்து, அதை மேற்கொண்டவர்

of of 5. X- -