பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

110


திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார் i ()

அதன் ஐந்துறுப்புகளும் இணைந்து செயல்படுவது போல், பொறிகள் ஐந்தும் ஒன்றாக இணைந்து செயல்படுவதில்லை. கண் ஒன்றைக் காணவிழையும் பொழுது, காது வேறொன்றைக் கேட்கவும், வாய் மற்றொன்றைச் சுவைக்கவும், மூக்கு இன்னொன்றை முகரவும், உடல் அடுத்தவொன்றின் மேற்படர்ந்து நுகரவும் விழையுமல்லவா? இவை ஒவ்வொன்றையும் அறிவுகொண்டு தனித்தனியே போராடுதலை, யானைப் பாகன் துறட்டி கொண்டு யானையை அடக்குதற்குப் பொருத்தியுரைப்பது எங்ங்ணம்? எனவே ஒர் யானை உருவகமும் பொருந்தாதென ஒதுக்குக இவையில்வாறாக, தோட்டி என்பதற்குக் கதவு என்று பொருள் கொள்வதே மிகப் பொருந்துவதாம் என்க. என்னை, பொறிகளின் ஐந்து வாயில்களையும் தேவையில்லாவிடத்து, அறிவு என்னும் கதவை அடைத்துக் காத்துக்கொள்வதே இங்குக் கூறப்பெறுவதாகலின், அதுவே சாலப் பொருந்தும் உருவகமாம் என்க. நூலாசிரியரே நிறை என்னும் கதவை நாணம் என்னும் தாழ் அடைத்து நிற்பதாகக் கூறுதல் காண்க. (125)

தோட்டி - கதவு. தொல் - தொடு - தொடுப்பது - இணைத்து வைத்திருப்பது மூடி வைத்திருப்பது. தொல் தொலி - தோல் - விதை, காய், கனி, மரம் இவற்றையும், உடம்பையும் பொதிந்து மூடி, காப்பாக வைத்திருக்க உதவுவது. தொல் - தொலு - தொடு - தொடி - வளையல்கள் கழன்று விழாமலிருக்க, முன் கையில் காப்பாக, கைப்பிடிப்பாக அணியும் வளை; அவரை புளி முதலிய விதைகளை விளா, முந்திரி, முதலிய காய்களை, முட்டை ஆகிய இவற்றைத் தொடி - தோடு - மூடிக் காப்பாக வைத்துள்ள சிறிது வலிவான தோல். தொடி - தொட்டி - தேங்காயின் மேல் மூடியிருக்கும் கனமான தோடு - சிரட்டை கொங்கு நாட்டு வழக்கு நீரை தேக்கிக் காத்து வைக்க உதவும் நீர்த் தொட்டியையும் குறிக்கும். ... " தொட்டி - தோட்டி இல்ல வாயிலை அது போலும் திறப்புகளை மூடிக் காப்பாக வைக்க உதவும் கதவு. - தோட்டி - இன்னும் ஆற்று நீரைத் தடுத்துக் காத்து வைக்க உதவும் அணை, சுடலையைக் காக்கின்றவன் என்று காத்தல் பொருளில் பிறவற்றையும் குறிக்கும் என்க. . . . 2. ஒரைந்தும் - ஓர் ஐந்தினையும் ஐந்து பொறிகள் ஒவ்வொன்றையும். உரையாசிரியர் பிறர் ஐந்து எனும் சொற்கு மட்டும் ஐந்து பொறிகள்