பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 அ - 1 - 3 -நீத்தார் பெருமை - 3

என்னை? ஆரியக் கதைப்படியே, இந்திரன் ஐந்து பொறிகளையும் அவித்து யாகஞ் செய்து இந்திரப் பதவி பெற்றனனேனும், அதைத் தொடர்ந்து கடைப்பிடியாதவன். அடுத்து, கெளதம முனிவனின் மனைவி அகலிகையைக்

கரவடமாகக் கூடி, அது வெளிப்பட்டு, அம்முனிவனால் சாவத்துட்பட்ட நிகழ்வைப் பரிமேலழகர் எடுத்துக் காட்டி, 'அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், இந்திரனே சாலும் கரி என்றார்' என்றதும் பொருந்துவதன்று என்க. என்னை? அக் கெளதமரும் ஐந்தவித்த ஆற்றல் இழந்தவராகி இல்லறம் மேற்கொண்டதும், இந்திரனின் களவை முன்னரே விளங்கிக்கொள்ளாமற் போனதும் அவ்வாற்றலற்ற தன்மையையே காட்டும் என்க. .

O

உசு செயற்கரிய செய்வார் பெரியர்; சிறியர்

செயற்கரிய செய்கலா தார். 25

பொருள் கோள் முறை:

பெரியர் செயற்கு அரிய செய்வார்; சிறியர் செயற்கரிய செய்கலாதார்.

பொழிப்புரை (அறிவு வழி, மனவழி, உடல்வழியான மூவுணர்வுத் தூண்டற் செயல்களுள்) செய்வதற்கு மிகவும் அரியனவும், உலகோர்க்கு உய்வு தருவனவும் ஆன (அறிவு வழி மனவழி அறச் செயல்களையே எப்பொழுதும் தேர்ந்து செய்பவர்கள் பெரியவர்கள். அவ்வாறு செய்ய இயலாமல் தமக்குமட்டுமே நன்மை தருவனவாகிய எளியவான (உடல்வழிச் செயல்களையே சிந்தனை, அறிவு முயற்சியின்றிச் செய்பவர்கள் சிறியவர்கள்.

சில விளக்கக் குறிப்புகள்:

1. செயற்கு அரிய செய்வதற்குக் கடினமான, அருமையான, பிறர் எளிதாகச் செய்ய இயலாச் செயல்கள். - இவ்வாறு செய்வதற்கு அருமையான செயல்கள் அறிவின் வழிப்பட்ட செயல்களும் மனத்தின் வழிப்பட்ட செயல்களும் ஆம். அவை இணைந்து நடைபெறும் செயல்களே நீத்தாருக்குரிய