பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

118


திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் ł 18

அவற்றின் தொடர்பியக்க இயங்கியல், நிலைகளையும் அறிந்து, ஆராய்ந்து, தேர்ந்து, தெளிந்து, உணர்ந்து கொள்பவனிடத்தில், இந்த உலகின் பிற அறிவியக்க நிலைகள் அனைத்தும் விளங்கித் தோன்றும். இந்த உலகும் அவனுக்கு இணையாக இணைந்து இயங்கும். இவ்வறிவு நிலைகள் அறிந்து கொள்ளும் வாய்ப்பு, தந்நலம் நீத்துப் பொதுமைநலம் மேற்கொண்ட அறவுணர்வாளர்களுக்கே அமையும்)

சில விளக்கக் குறிப்புகள்:

1. சுவையொளி ஊறோசை நாற்றம் - மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் பொறிகளின் படிநிலை வளர்ச்சித் தோற்ற வகைகளுக்குரிய, ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஓசை யென்னும் புலனுணர்வு வரிசைகளை, சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்று செய்யுளமைதி கருதி முறை மாற்றி வரிசைப்படுத்தினர். உயிர்ப்படிநிலை வளர்ச்சி கறும் ஒன்றறிவதுவே என்னும் தொல்காப்பிய நூற்பாவையும் (1525)

ஒர்க, 2. என்ற ஐந்தின் வகை தெரிவான் - மேற் கூறிய ஐம்பொறிகளின் உண்மைகளையும், அவற்றின் ஐம்புலவுனா வுகளின்

உண்மைகளையும், அவை சேர்ந்தியங்கும் உடம்பினது தொழிற்கருவிகளின் இயக்க உண்மைகளையும், அவை அண்டத்தின் ஐம்பூதப் பொருள்களின்வழிச் செயற்படுகின்ற தன்மைகளையும், அவற்றிலிருந்து இயங்கும் பேரண்டங்களின் தன்மைகளையும், அவையனைத்துக்கும் மூலமான பொருளின் உண்மையையும், வகைப்படுத்தியுணர்கின்றவன். (இவற்றின் முழுவிளக்கங்களை யெல்லாம் விரிவாகவும் விளக்கமாகவும் இச்சுருக்க நூலின் விரிவாய் வரவிருக்கும் நிறைவுரை நூலுட் கண்டு கொள்க) 3. கண்ணே உலகு - அவனிடத்தேயே இவ்வுலகின் பிற அறிவியக்க நிலைகள் அனைத்தும் விளங்கித் தோன்றும். அஃதாவது அறிதற்காகி நிற்கும். இந்த உலகும் அவனுக்கு இயைபாக இணைந்து இயங்கும். கண்ணதாக இடத்ததாக அவனிடத்து உலகு நின்று இயங்கும் என்றது அவன் அறிவு, இயக்க நிலைகளுக்கு இவ்வுல்கிலுள்ளார் யாவரும் இயைபுகொண்டு இணையாகியும்,துணையாகியும் இருப்பர் என்றதுமாம். . . . . . . . . ; . - கண்ணே - இடத்தே. -

கண் + (அது > கண் +து > கண்டு. க்ட்டு வலித்தல் திரிபு கட்டு ஏ கட்டே = கண்ணதே இட்த்த்தே 4. இதனால், உலகில் பல்வகை இருப்புநில்ை இப்ங்குநிலை, திரிபுநிலை,