பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 19 அ - 1 - 3 - நீத்தார் பெருமை - 3

இறவு நிலை முதலிய நிலைகளையும் அவற்றின் இணைவு நிலையினையும் நன்கு உணர்ந்த மெய்யறிவினார்க்கே இவ்வுலக மாந்தர் இயைபுகொண்டு இணங்கி நிற்பர் என்பதுணர்த்தினர் என்க. செயற்கரிய செய்வதற்கு இம் மெய்யறிவுணர்வு இன்றியமையாத தாகலின் அதன் பின்னர் இது கூறினார்.

Ö

உஅ நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும். 28

பொருள் கோள் முறை : இயல்பு

பொழிப்புரை மயக்கமும் அறியாமையும் இன்றி, முழுப்பயனும் விளையும்படி, குறைவில்லாத நிறைவான மொழிகளைப் பேசும் (ஆற்றல் வாய்ந்த, பொதுமையுணர்வுள்ள) அறநிலை மாந்தர் தம் பெருமையை, இந்நிலவுலகத்தில் (என்றென்றும் நிலையாகவும், எல்லார்க்கும் எளிதே புலப்படாமல், முனைவார்க்கே விளங்கும்படி, பொருள் மறைவாகவும் நின்றில்ங்கும் அவரின் பொய்யாத வாய்மை மொழிகள் (அடையாளம்) காட்டிவிடும்.

சில விளக்கக் குறிப்புகள்:

1. நிறை மொழி மாந்தர் - எல்லா உணர்வானும் பொருளானும் குறைவின்றி நிறைவுற்று என்றும் விளங்கும் மொழியைப் பேசுபவர். நிறை நிறுவுதல் நிறுத்தல் நாநார்த்த தீபிகை 1027 2. மறைமொழி - வெறும் பார்வையால் புலப்படாமல், முனைந்து கற்றார்க்கும் கருதுதல் உற்றார்க்கும் மட்டும் பொருள் புலப்படும் மொழி. - w . " நிறைமொழி மறைமொழி என்றது புலப்பாட்டானும் தன்மையனும், பொருளானும், நுட்பத்தானும், மெய்ம்மத்தானும், பிற்க்கு அரிதாயும், அறவோர்க்கு எளிதாயும் காரண கருமியங்களுடன் கைவரும் கூறுவாய்ந்ததை உணர்த்தும் என்க. - - -- . 3. பெருமை - என்பது, காலத்தானும், இடத்தானும் இனத்தனும் அடைவுபட்டுவிடாமல், பெருகிய பரவுதலையும் புகழையும்