பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 .

அ - 1 - 3 - நீத்தார் பெருமை - 3

நின்றார் என்றார். படிப்படியாய்க் குணநிலையில் மேம்படுதலை ஏறி என்றார். . குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுள்வது அரிது; அவ்வாறு வெகுண்டாலும் அவ் வெகுளி ஒரு கணந்தான் - கண்ணிமைப் பொழுதுதான் - நிற்கும்; அவ்வாறு ஒரு கண நேர அளவே ஆயினும், அதைப் பிறர் தமக்குத் தீங்கு நேரா வண்ணம் காத்துக்கொள்ளல் அரிது. என்னை வெகுண்டவர் முழு நல்லுணர் வாளராகவும், பேரறவாளராகவும் இருப்பதால், அவரின் மனவெழுச்சி, வெகுளிக்கு ஆளாயினவர்தம் குறைமனவுணர்வினும் கடிதோங்கி நிற்குமாகலின், அவர் மனம் தாக்கமுறுவது திண்ணம் மனம் தாக்க முறவே, அறிவும் உடலும் தாக்க முற்றுச் செயல் அறுதலும் திண்ணம். மெலியது செயலறவே வலியதன் செயல் நிகழும் ஆகலின், பேரறவாளர் தம்வெகுளியுணர்வு செயல்படும் என்றும் அதைத் தடுத்துத் தனக்குத் தீங்கு வராமல் காத்துக்கொள்ளல் அரிது என்றும் கூறினார் என்க.

- அறிஞர் கா. அப்பாத்துரையார் தம் மணி விளக்கவுரையில் இதற்கு

விளக்கம் எழுதுகையில்,

அவாவும் சினமும் வென்றவர் ஒழுக்கத்து நீத்தார் மரபினராகிய

சான்றோர். அவர் தமக்கென எதுவும் அவாவுதலோ, வெறுத்தலோ ற்றவர் - தமக்கென அவர் எக்காலத்திலும் சினம் கொள்ளாதவர். ஆனால் அத்தகையவர் குமுகாய இனநலன்களாகிய நாட்டுநலம் கருதி, அருட்சீற்றம் கொள்ளும் நிலை ஏற்பட்டால், அதன் விளைவை, நாட்டை ஆள்பவர் அல்லது நாட்டில் ஆளப்படுபவர் ஆகிய இரு சார்பினரிடையிலும் எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவர் சீற்றம் தூண்டிய சூழல் அழிந்தாலன்றி, அச்சூழலுக்குக் காரணமான ஆட்சி கவிழ்தல் உறுதி ஆகும் என்று கூறுவதும் காண்க .

- இதற்குச் சான்றுகளாக, இவ்வுரையாசிரியர் வெகுளியான், இந்திய

நாட்டு ஆட்சித்தலைவி, இந்திரா காந்தியினது ஆட்சி 1976இல் கவிழ்ந்ததும், அவரின் கொடுமகனும் ஆட்சித்தலைவனுமாயிருந்த இராசீவ் என்னும் மாகொடியன் 1991-இல் மாண்டு மடிந்ததும், அவ்வக்கால் அவர் பாடிய சீற்றவெழுச்சிச் சாவப் பாடல்களால் கண்டுணர்க.

வெகுளி - கொதிப்புடைய கடுஞ்சினம். சினம், வெகுளி, முனிவு,

சீற்றம், கோவம், சாவம் என மனவெழுச்சி குறித்த சொற்கள் பல.

அவற்றுள்,