பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

122


'திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் {22

சினம் - சிறு அளவில் குமிழ்போல் சினைத்துத் தோன்றி மறைவது, மனவுணர்வு மட்டுமே கொண்டது. சில் - சிறு - சின் சினை . சினம். வெகுளி - மனம் வெந்து தோன்றுவது; அறவுணர்வும் தழுவியது. வேகு - வெகுள். சீற்றம் - அறிவு, மனம், உடல் ஆகிய மூவகை உணர்வு எழுச்சிகளையும் கொண்டது. சிறு - சீற்றம். முனிவு - முனைவர் முனிவர்) கொள்ளும் சினம் முன்கோவம். முனை - முனைவர் முனிவர். முனிவர் வெகுளி கடவுள்களின் வெகுளி போல் கருதப்பெற்றது. "கலைவலார் நெஞ்சிற் காமமே போன்றும் கடவுளர் வெகுளியே போன்றும்’

- சீவக சிந், 2107 கோவம் - கட்டளையுடன் கூடிய அரசன் கொள்ளும் சினம். கோ-அரசன். சாவம் - மனவெழுச்சியும் அறிவெழுச்சியும் அறவெழுச்சியும் கொண்டு காரணத்தான் வெளிப்பட்டுப் பிறர் சாவுக்குக் காரணமாகிய வெஞ்சினம்.

3. கணம் - கண்ணிமைப் பொழுது, நொடி {}

ங்0. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்

30.

பொருள் கோள் முறை:

மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு, ஒழுகலான், அந்தணர் என்போர் அறவோர்.

பொழிப்புரை பிறர்க்கு நலமே கருதுதல், கூறுதல், செய்தல் ஆகிய வகையில்) ஆறறிவுடைய மாந்தர்க்கேயன்றி, ஒன்று முதல் ஐந்தறிவுடைய அனைத்துயிர்க்கும் செவ்விய குளிர்ந்த தன்மையை உள்ளத்தில்