பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123

அ - 1 - 3 - நீத்தார் பெருமை - 3

கொள்கையாகக் கொண்டு, அதனையே நடைமுறையிலும் கடைப்பிடித்து ஒழுகுதலால், அத்தகைய அறவாழ்க்கை பூண்டவர்களே அந்தணர்கள் எனப் பெறுவதற்கு உரியோராவர்.

சில விளக்கக் குறிப்புகள்:

1. அந்தணர் - அந்தண்மையுடையவர்கள். அந்தண்மை - செவ்விய,

குளிர்ந்த தன்மை. எவரிடத்தும் எப்பொழுதும் எந்நிலையிலும் மனவெறுக்கை, அறிவு வேறுபாடு, செயல் வெறுப்பு ஆகியவற்றான் முகச்சுழிப்பும், கடுகடுப்பும் இல்லாமல் நடந்துகொள்ளும் குளிர்ந்த நீர்மைத்தன்மை, - அந்தணர் என்னும் ஒரு சொல், பிறவியான் ஒரு மக்கட் பிரிவினர்க்கு ஆகி வரத் தொடங்கிய பொழுது, அவ்வாறு ஒரு பிறவியில்லை என அவ்வழக்கை மறுத்துக் கூறினார் என்க. பிறவிச் செருக்கினான் தமக்கு உயர்வு கூறிப் பிற மக்களை விலங்கினும் கீழாக மதிக்கின்ற கீழ்மை உணர்வுடையார் அந்தணர் ஆகார் என்றும், மக்களுக்கு மட்டன்றிப் பிற எவ்வுயிர்க்கும் குளிர்மையருள் காட்டுவதே 'செந்தண்மை’ என்றும், அது பூண்டொழுகும் அறவோரே அந்தணர் என்றும் விளக்கினர் என்க. இச் சொற் பொருளில் நூலாசிரியர் காலத்து மாற்றம்

ஏற்பட்டிருத்தல் வேண்டும். அல்லாக்கால் அதற்கு இலக்கணம்

2.

6.

7.

கூறுதல் அவர்க்குத் தேவையிருந்திராது. அறவோர் - உலகின்பங்களைப் பிறர் நலம் கருதித் தவிர்த்துக் கொண்ட பேரறவாளர்கள் அறிவர்கள். இத்தகையார் கானுறை

துறவியரோ, முனிவரோ அல்லர் என்று கருதுக.

மற்று - அசைநிலை யன்று. மாந்தர் தவிரப் பிற - என்னும் பொருளுடைச் சொல். மற்றெவ்வுயிர்க்கும் என்றதால் அப் பொருள் கொள்ளப் பெற்றது. எல்லாவுயிரும் என்று பிறிதோரிடத்தும் (260) கூறுவார். . செந்தண்மை - செவ்விய தண்மை. நேரிய நடையும், இணங்கிப் பழகும் குளிர்ந்த தன்மையும். . பூண்டு ஒழுகுதல் - கொள்கையாகக் கொண்டு கடைப்பிடித்தல், இதுவன்றிப் பிறவிச் செருக்கான் நூல் முதலிய பூண்டு அந்தணர் எனக் கூறப்பெறுதலைக் குறிப்பின் மறுத்தார். . அந்தண்மை - புத்த சமயப் பூணுகை

செந்தண்மை - அருக சமண சமயப் பூணுகை