பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

124


இரண்டு அறக்கடைப்பிடிகளையும் நீத்தார் க்குரியனவாக இணைத்துரைத்தார்.

ஆரிய மத முனிவோர்க்கு அந்தண்மை இல்லையாகலின் ஆங்கு அந்தணரும் இல்லையென்க. அவர்கள் வேதம் ஒதுதலால் வேதியரும், பிரம்மன் முகத்துக் தோற்றம் கொண்டதாகக் கூறப்பெறுவதால் பிராமணருமே ஆவர். மற்று, பிரம்மம் உணர்தலால் பிராமணர் ஆவர் என்று பொதுவுரைப்பது ஏமாற்று, பிறர் அவ்வாறு உணர்ந்ததாகக் கூறுதலை அவர் ஏலார் ஆகையான்.