பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 அ - 1 - 4 - அறன் வலியுறுத்தல் - 4

அ-1. பாயிரவியல்

அ-1-4. அறன் வலியுறுத்தல்-4. அதிகார முன்னுரை:

அறவொழுக்கமுடைய நீத்தார் இயல்புகளை முற்கூறியவர், அவ்வறம் ஏதாம் என்றும், அதனைச் சிறப்பாகவும் பொதுவாகவும் கடைப்பிடித்தொழுகுதல் எதற்காம் என்றும், அவ்வாறு ஒழுகுதலின் பயன் இதுவாம் என்றும் விளக்கிக் கூறி, பிறவுயிர்களுக்கன்றி, அறிவான் மேம்பட்ட மாந்த உயிர் வாழ்க்கைக்கு அதன் இன்றியமையாமையையும் வலியுறுத்தினர் என்க. w . - .

அறு என்னும் வேரடியாகப் பிறந்த சொல் அறம் (அறு + அம் அறம். அம் பெருமைப் பொருள் பின்னொட்டு. (எ-டு) நிலை (Stand) சிறியது; நின்லயம் (Station) பெரியது. விளக்கு சிறியது விளக்கம் (கலங்கரை விளக்கம் பெரியது. அறம் அறுத்தல், வரையறுத்தல், முறை செய்தல், ஒழுங்குபடுத்துதல், நெறிப்படுத்துதல், தானே ஒரு வழியமைதல் போலும் பொருள்பொதி சொல். .

என்னை: படிநிலை வளர்ச்சி பெற்று, உருத்திருந்தி, அறிவுணர்வு தோன்றித், தாறுமாறாக இயங்கிவந்த தொடக்கக்கால மாந்தவின. உயிர்கள், ஊணுக்கும், உறவுக்கும், ஒழுகலுக்கும் தம்முள் சண்டையிட்டுப் பொருது, பற்பல உயிரியல், உணர்வியல், அறிவியல், ஒழுகியல், வாழ்வியல், சிக்கலுற்றுப் பின், சிக்கறுத்துப் பதங்கண்டு, தம்முள் ஆன்று, அவிந்து, அடங்கி, அமைந்து, காலந்தோறும் மாறுபாடுகளும் முரண்பாடுகளும் கண்டு கண்டு, அவை விலக்கித் துலக்கிக் கொண்டே