பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

132


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 132

மொத்தத்தில் நாம் கூறப்புகுவது, ஆரிய வழக்கின் முப்பத்திரண்டு தர்மங்களில், அனைத்துச் சமயத்தாரையும் வேறுபாடின்றிப் போற்றிப் புரந்துகொள்வதும் ஒரு தர்மமாக வகுக்கப் பெற்றுள்ளது என்று அறிந்து கொள்வதே என்க. இனி, அடுத்து வரும் தர்மங்களை மேலே கூறுவோம்.

சு பசுவுக்கு வாயுறை : ஆக்களைத் தீனி கொடுத்துக் காப்பது. ரு. சிறைச்சோறு : சிறையிலுள்ளவர்களுக்கு உண்டி கொடுப்பது. சு ஐயம் இடல் : இரவலர்க்கு ஈதல். எ. தின்பண்டம் நல்கல் : வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்குதல். அ. அறவைச் சோறு : கைவிடப்பட்ட துணையற்ற ஏதிலி (அனாதைகளுக்கு உணவு, உடை, உறையுள் கொடுத்து ஆதரித்தல். சு. மகப்பெறுவித்தல் : குழந்தைப் பேற்றுக்குத் துணை செய்தல்,

ஈனில்களை அமைத்தல். - க0. மகவு வளர்த்தல் : ஏதிலி, ஏழைக் குழந்தைகளை வளர்த்தல். கக. மகப்பால் வார்த்தல் : ஏதிலியர், ஏழையர் குழந்தைகளுக்குப் பால்

வழங்குதல். கஉ. அறவைப் பினஞ்சுடுதல் : ஏதிலியர், ஏழையர் பிணங்களைச் சுடுதல்

அல்லது புதைத்தல். - கங். அறவைத் துரியம் : ஏதிலியர், ஏழையர்க்கு உடைகள் வழங்குதல். கச கண்ணம் : வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தருதல். கரு. நோய் மருந்து : ஏதிலியர், ஏழையர் மற்றும் நோயாளிகளுக்கு

மருந்து தருதல். . . கசு வண்ணார் : ஏதிலியர், ஏழையர்க்குத் துணி வெளுத்துக் கொடுக்க

ஏற்பாடு செய்தல். கன. நாவிதர் : ஏதிலியர், ஏழையர்க்கு முகவழிப்பு, தலைமுடி வெட்டி

ஒழுங்கு செய்ய உதவுதல். க.அ. கண்ணாடி : இல்லாதவர்க்கு முகம் பார்க்கக் கண்ணாடி வழங்குதல். கசு. காதோலை : ஏழைப் பெண்டிர்க்குக் காதுகளில் அணிய

பனையோலைச் சுருள்களை அளித்தல். s." உ0. கண் மருந்து ஏழைப் பெண்டிர்க்குக் கண் மை வழங்குதல். உக. தலைக்கெண்ணெய் : ஏழையர்க்குத் தலை வாரிக்கொள்ள

எண்ணெய் தருதல். . . . உஉ பெண் போகம் உடல் இணைவை விரும்பும் பெண்டிரை இணைந்து

மகிழ்வித்தல். . . . .