பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

134


திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார் 134

- இஃது ஒருவகை அறவுணர்வு.

3.

வெறுப்பின்மை : எதையும் வெறுக்காமை, எதன்மேலும் கடுவெறுப்பின்மை (freefrom disgues) இஃது ஒருவகை அறவுணர்வு.

மயக்கமின்மை : எதிலும் குழப்பமோ, திகைப்போ, தடுமாற்றமோ

(Perplexity) இல்லாதிருத்தல். இதுவும் ஒருவகை அறவுணர்வு.

பழி நீக்கல் : பிறர்மேல் பழி கூறுதல், பழிமொழிதல், அவதூறு

கூறல், தூற்றித்திரிதல் (reproches), குற்றம் கண்டு பிடிக்கிற, குறைகூறுகிற தன்மை (Consoriousness) இல்லாதிருப்பது ஒர் அறவுணர்வு; அவ்வாறு கூறப்படும் பழியை நீக்குவதுமாம்.

அழிந்தோரை நிறுத்தல் : கடுந்துன்பம் (distress) அழிபாடு, பாழ்நிலை,

சீர்குலைவு (ruin) உற்றோரை அணுகி அவர் நிலைக்கு ஆறுதல் கூறி, உதவும் மனவுணர்வு, இஃதும் ஒருவகை அறவுணர்வுச் செயல். அறம் விளக்கல் : நற்செயல்களின் தன்மை - நன்மை, அறச்செயல்களின் மேன்மை, பயன் - இவற்றை மற்றவர்க்கு விளக்கமாக எடுத்துக் கூறி அவர்களையும் அறநெறிக்கு -glugăgăgă, (bringing into light the nature of benefaction and expounding it). இதுவும் ஓர் அறவுணர்வுச் செயல்.

. பேரன்புடைமை : பிறர்மேல் மிகுதியான, நிறைவான, உண்மையான

அன்பு செலுத்துதல் (abunded love). இதுவும் அறவுணர்வுச் செயற்பாடுகளில் ஒன்றென்க.

- இங்ங்ணம் பற்பலவாறாகவும், பல கூறுகளாகவும் சொல்லப்பெற்ற

தமிழியல் அறமும், ஆரியவியல் வர்ணவொழுக்க அடிப்படைத் தர்மக் கோட்பாடும், ஒன்றுடன் ஒன்று கலந்து மயங்கிக் கிடந்த காலத்து, இந்நூல், திருக்குறள்) தமிழியல் அறம் இது வெனப் பிரித்துக் காட்டித் தொகுத்து, வகுத்துப் பகுத்துச் சொல்ல முன் வந்த தென்க. -

- இனி, எல்லா அறக் கூறுகளும், முன்னர்க் கூறிய மீமிசை மாந்தப்

பொதுநலவுணர்வையே அடிப்படையாகக் கொண்டிருப்பதை இந்நூல் முழுவதும் காணலாம் என்க.

அவற்றின் பிழிவாக, மக்கள்நலப் பொதுமைக் கோட்பாடே உயர்ந்து

நிற்பதைக் கீழ்வரும் மணிமேகலைப் பாடல் விளக்கி நிற்கும்.

"அறமெனப் படுவது யாதெனக் கேட்பின் மறவா திதுகேள் மன்னுயிாக் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்ட தில்லெனக் காவலன் உரைக்கும்”