பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

136


'திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 136

ஆரிய தர்மம் சாதிப் பிரிவுகளுக்கேற்ப வகுத்துரைப்பது மக்களைச் சாதிகளாகப் பகுத்துக்கொண்டு, அவர்களுக்குள் ஓர் ஒப்பந்த (Social Contract) முறையை அடிப்படையாகக்கொண்டது. இஃதை இன்ன சாதியார், வர்ணத்தார் செய்வது தர்மம் என்றால், அதையே இன்னொரு சாதியார், வர்ணத்தார் செய்தால் தர்மம் அன்று என்று கட்டுரைப்பது. மேலும் அது, சிறப்பாகப் பிராமணர்களுக்கே நன்மை தருமாறு கரவாக அமைக்கப்பெற்றது; செயற்கையானது; நடுநிலையற்றது; அடிப்படை அமைப்பியல் வேறுபாடுகளையும் மாறுபாடுகளையும் கொண்டது.

- இனி, தர்மம் என்பது வேறு தருமம்' என்பது வேறு. 'தர்மம் - ஆரியவழி மக்கள் நெறிமுறை ஆரிய ஸ்மிருதிகளை அடிப் படையாகக் கொண்டது. இது சமசுக்கிருதச் சொல்.

தருமம்' என்பது கொடை ஈகையறம், இரவலர்க்கும், ஏழையர்க்கும், இல்லாதவர்க்கும், ஏதிலியர்க்கும், அறவோர்க்கும், அறிஞர்க்கும் மனம் நெகிழ்ந்து மகிழ்ந்து கொடுக்கும் ஈகை -

கொடை ஒர் அறக்கூறு கொடையே முழு அறமுமன்று. பொதுமை உணர்வுக்கு அஃதோர் எடுத்துக்காட்டு, அதுவே முழுவதும் பொதுமையுணர்வாகாது. -

- இத்தகைய மாந்தவியங்கியல் கோட்பாடுகளை, அவரவர் வாழ் வியலுக்கும், சூழ்வியலுக்கும் பொருத்திப் பொதுமை நலம் கூறுவதே இந்நூலின் நோக்கமாகும். என்பதால், அந் நோக்கத்திற்கு அடிப்படையாக, வித்தாக அமைந்த அறவுணர்வுகளை இங்கு வலியுறுத்தினார் என்க. . .

O

ங்க. சிறப்பினும் செல்வமும் ஈனும் அறத்தினுங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு. 31

பொருள் கோள் முறை:

அறம் சிறப்பு ஈனும்; செல்வமும் ஈனும், உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் எவனோ?

பொழிப்புரை : அறமெனும் பொதுநலவுணர்வு (உலக வாழ்க்கையில் இதற்கு

முன் இல்லாத பெருமையையும், பொதுமக்கள் மதிப்பையும், புகழையும் வாழ்வியல் நிறைவையும் ஏற்படுத்தித் தரும்: வாழ்க்கை நலத்திற்குரிய