பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

138


திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் 138

தனித்த முயற்சிகள் இல்லை. அதனைத்தவிர்த்து அவ்வாறு பொது நலவுணர்வோடு இயங்காமல் தன்னலவுணர்வோடு இயங்குவதனால் ஒருவர்க்கு வருவதைப் போல் வேறுகேடுகள் இல்லை.

சில விளக்கக் குறிப்புகள் :

1. ஆக்கம் - ஆகி வருகின்ற பல்வகைப் பயன்கள். 2. மறத்தல் - செய்யாது தவிர்த்தல்; புறக்கணித்தல்; நினைவில்

கொள்ளாமை.

3. கேடு - தன்னைப் பலவகையாலும் கெடுத்துக்கொள்கின்ற

நிலைகள்.

4. இதுவும், அறத்தால் விளையும் நன்மையைக் கூறியதும், அதைக் கடைப்பிடியா விடத்து வரும் தீமையைக் கூறியதுமாகும். O

கங். ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே -

செல்லும்வாய் எல்லாம் செயல். 33

அறவினை ஒவாதே, ஒல்லும் வகையான் செல்லும் வாய் எல்லாம் செயல்.

பொழிப்புரை : பொதுநலஞ் சார்ந்த நல்ல செயல்களை எந்தக் காரணத் தானும் தவிராமல், அவரவரால் முடிந்த வகையிலெல்லாம் முனைந்து, எவ்வெவ் விடத்துத் தேவையோ, அவ்வவ்விடத்து, அவ்வவ் வழிகளிளெல்லாம் செய்து முடிக்க . . சில விளக்கக் குறிப்புகள் :

1 ஒல்லுதல் - ఇతు பொருந்து என்னும் வேரடியாகப் பிறந்த சொல். ஒல் ஒல்லு ஒன்னு ஒன்று ஒன்றுதல் ஒல்லுதல் பொருந்துதல், சேர்தல், இணைதல், இயலுதல், ஒல்லும் வகையான் : பொருந்திய, இயன்ற வகையிலெல்லாம், தன்