பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

140


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் #40

எண்ணமும், தவறான நோக்கமும் இல்லாதவனாக இருப்பது; அவ்வாறே நடப்பது. . -

மனமது செம்மை யானால் மந்திரம் செபிக்க வேண்டாம் மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம் மனமது செம்மையானால் மற்றதும் செம்மை யாமே!

திருமந்: என்பார் திருமூலர். 2. அனைத்து அறம் - அனைத்து வகையாலும். அதுவே அறத்திற்கு

அடிப்படையாகும்; எனவே அதுவே அறம் ஆகும். 3. ஆகுலம் - ஆகு + உலம் ஆகிய ஒலி, பெருகிய ஒலி, வினைத் தொகை, உலம்புதல் ஒலித்தல், ஆரவாரித்தல், தூய தமிழ்ச் சொல். வடசொல் என்பாரும் உளர். மனத்தில் மாசு என்பது கரவு, வஞ்சகம், ஏமாற்று நோக்கம், தீய நினைவு முதலியவை இருப்பது. மா = கறுப்பு மாசு கறுப்புப் போலும் கறைத் தன்மையான குற்ற உணர்வுகள், இவை இல்லாதிருப்பின், எண்ணம், உரை, செயல் யாவும் குற்றமின்றி இயங்குமாகலின், மனந்துய்மையே அனைத்து அற நிலைகளுக்கும் முதலானது, அடிப்படையானது என்றார். மனம் மாசுற்றிருப்பின் உரை, செயல், தோற்றம் பிற யாவும் கரவும், பொய்ம்மையும், போலிமையும், வஞ்சகமும், ஏமாற்றும், தீமையும் கலந்து நிற்குமாகலின், பொதுமைநல விளைவும் பழுதுபட்டுப் போகும் ஆதலால், அந்நிலை கூடாது; அறத்திற்குக் கேடானது; வெளியே வெறும் ஆரவாரத்தை மட்டும் கொண்டது என்றார் என்க. மற்று, மனத்துக்கண் மாசு என்பதற்கு அடுத்த குறள் விளக்கம் தருகிறது. - - மனத்துக்கண் மாசு இருத்தல் கூடாது என்பது நீர் காற்று முதலிய அனைவர்க்கும் உரியவாய மூலப் பொருள்களில் மாசு (Pollution) படுத்தல் கூடாது என்பது போலும் என்க. என்னை? ஒலி, ஒளி எவ்வாறு அலை அலையாகப் பரவுகின்றனவோ, அவ்வாறே மனத்தினின்று எழும் எண்ண அலைகளும் மற்ற மனங்களுக்கும் பரவி அவற்றையும் தாக்கச் செய்கின்றன. அக்கால் தம் எண்ணங்கள் மாசுறின் பிறர் எண்ணங்களும் மாசுபட நேர்கின்றன. தமக்கும் பிறர்க்கும் நலம் பயப்பதே அறமாகலின், தம் மனமாசு பிறர் மனத்தையும் மாசுறச் செய்வது மனவுணர்வுக்கேடு (Pollution ofmind) ஆகையால், அவ்வறமல்லாத