பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

144


திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார் 144

நாளைச் செய்குவம் அறம்எனில் இன்றே கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும் இதுவென வரைந்து வாழ்நாள் உணர்ந்தார் முதுநீர் உலகின் முழுவதும் இல்லை'

- சிலப்.

இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க வறமே விழுத்துணை யாவது? -

- மணிமே. சிறை. 135-138.

தினைத்துணை யாயினும் செல்வமும் யாக்கையும் நிலையா வென்றே நிலைபெற வுணர்ந்தே மலையா வறத்தின் மாதவம் புரிந்தேன் -

- மணிமே. கச்சி. 98-100

'மின்னும் இளமை உளதாம் எனமகிழ்ந்து பின்னை யறிவென்றால் பேதைமை - தன்னைத் துணித்தாறுந் தூங்கா தறஞ்செய்க கூற்றம் அணித்தாய் வருதலும் உண்டு.

- அறநெறி 106 2 மற்று - ஒர் இணைப்பிடைச் சொல். நூலாசிரியர் போலும் நிறைமொழி மாந்தரும், மெய்ப்பொருளறிஞரும் ஆகியர் மிகக் குறுகிய பாவடிகளில், அசைநிலைகளைப் பொருளின்றிப் பயன்படுத்தாராகலின், இது பொருள்தரும் சொல்லே என்க. உரையாசிரியர் பிறர் கூறுவது போல் அசையன்று. 'அறமாகிய பொதுநலத் தொண்டு, செய்வார்க்கும் செய்யப் பெற்றார்க்கும் இன்பந் தருவதொன்றாகலின், இது நமக்கு மகிழ்வு செய்யும் கடமை என்றுணர்த்தவும், மற்று, அது, நாம் தாழ்ச்சியுறுங்கால், நம்மைக் கேடடையாமல் காத்து நிற்பது, என்று அறிவுறுத்தவும், ஆகிய கருத்துகளையும் இணைத்துக் கூறுதற்கு இவ்விடைச்சொல்லைப் பயன்படுத்தினார் என்க. அறம் செய்தார்க்கு இன்பந்தருவதை ஈத்துவக்கும் இன்பம் என்னும் (228) குறளிலும் ஒத்துரைப்பார். - 3. பொன்றுங்கால் பொன்றல் நேருங்கால். பொன்றல் - கேடடைதல், சீர்கெடல், தீமையுறுதல், தாழ்ச்சியுறுதல், அழிதல். t