பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{45 அ - 1 - 4 - அறன் வலியுறுத்தல் - 4

- பொல் என்னும் வேரடியாகப் பிறந்த சொல். பொல்லது - கெட்டது,

பொல்லாதது - கெட்டது - தீமை, கேடு, தாழ்ச்சி, அழிவு. - ஈண்டு, கேடு அல்லது தீமை அல்லது தாழ்ச்சி நேருங்கால் என்பதே

பொருந்தும். இஃதன்றி, உயிர்போம் காலத்து, அதற்கு அழிவில்லாத துணையாம்' என்று பரிமேலழகர் முதல் பாவாணர் ஈறாகப் பலரும் உரை தருவது பொருந்தா தென்க, - என்னை? அறஞ் செய்தாரும் உயிரழிவதும், அக்கால் அறம் அதை அழிய விடாது காத்தல் இல்லையாம் என்பதும், உயிரியங்கியல் உண்மையாதல் காண்க இனி, உயிரழிவின் பின் பொன்றாது நிற்பது புகழ் என்பதும் உயிர் காத்தலாகாது. அது, புகழுக்குரிய தனிச்சிறப்பும் இலக்கணமுமாகலின் என்க. அத்துடன், புகழல்லால் பொன்றாது நிற்ப தொன்றில் (233 என்று அவரே உரைப்பதும் காண்க. - இனி, பொன்றுதல் என்னும் சொற்கு அழிதல் என்னும் பொருளை 156, 233 ஆகிய குறட்பாக்கள் தருமேனும், கெடுதல், தாழ்ச்சியுறுதல் என்னும் பொருள்களையும் 17, 886 ஆகிய குறள்களும் தருதல் ஒர்க. ஈண்டும் அதுவே பொருந்து பொருளும் என்க. -இனி, பரிமேலழகர் ஈண்டு, பொன்றுதற்கு அழிதல் பொருள் கண்டது, ஆரிய தர்மக்கோட்பாட்டை நிலை நிறுத்தவும், வேத மதத்திற்கு வலிவு சேர்க்கவுமே என்க. - பின்னை உயிர் அழிவதில்லையோ? என்பார்க்கு விடை வேறாம் என்க. அது பற்றிய உண்மையினை எம் நிறைவுரையிற் காட்டுதும்; ஆண்டுக் காண்க 4. துணை - உயிரழிவு நேராது தடுத்தாற் கன்றி, உடல் கேடடைந்து சீருறும் அல்லது நலமடையும் முயற்சிக்கே அறம் துணையாக இருத்தல் இயலும் மற்று உயிர் அழிவுறுங்கால் இறக்குங்கால் - எனின், அறம் துணை நிற்பதென்பது தேவையின்றாம். எனவே அது பொருளும் ஆகாதாம் என்க. - ஈண்டு, பரிமேலழகர், பொன்றாத் துணை என்றார், செய்த உடம்பு அழியவும், உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின் என்று . எழுதுவது குழப்பலும் உழப்பலும் மழுப்பலும் கூடிய உரை என்க. பொதுநலத் தொண்டு செய்வார் - அஃதாவது அறஞ்செய்வார் . ஏதோ ஒரு வகையில், ஒரு நிலையில் உடல்நலக் கேட்டையினும், பொருள்நிலைத் தாழ்ச்சியுறினும், மற்றுப் பிறவாறு இடுக்கட் படினும்,