பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 அ - 1 - 4 - அறன் வலியுறுத்தல் - 4

ஊர்ந்தவன், அதைச் சுமந்தவன் ஆகிய இரண்டு நிலைகளுக்குமிடையில் கர்மாக் கொள்கையை வலியுறுத்தி, இவை புண்ணிய பாவத்தின் செயல்கள் என்ற கருத்து, வெளிப்படையாகப் பேசப்பெற்றிருத்தல் வேண்டும். “அதனை மறுத்துரைக்கும் நோக்கத்தான், நூலாசிரியர், இஃதன்று அறவழியான் அமைந்த செயல் அறவழிக்கும் இவ்வுலகியல் தொழில் முறைக்கும் தொடர்பில்லை; இதுவேறு; அதுவேறு” என்று இவ்வெடுத்துக்காட்டின்வழி விளக்கினார் என்க. 'சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் (972) என்று ஆரியவியலின் பிறப்பியல் கொள்கையைக் கண்டிக்கும் பிறிதோரிடத்தும் இதை வலியுறுத்தினார் என்க. 'பல்லக்குச் சுமப்பவனிடம் அறத்தின் மெய்ப் பண்பைக் காணலாம்; பல்லக்கில் ஏறிச் செல்பவனிடம் அறக்கேட்டின் பண்பைக் காணலாம் என்பது நூலாசிரியர் கருத்தாதல் வேண்டும். 3. இனி, பரிமேலழகர், 'அறத்தாறு இதுவென வேண்டா என்பதற்கு, 'அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகம நூல்) அளவையின் உணர்த்தல் வேண்டா என்றும் சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை என்பதற்கு சிவிகையைக் காவுவானோடு தூக்கிச் செல்வானோடு செலுத்துவானிடை ஏறிச் செல்வானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும் என்றும், இட்டுக்கட்டிப் பொருள் தருவது, பரிமேலழகரது ஆரியவியலின் “கர்மாக் கோட்பாட்டை உணர்த்தவே என்க. அப் பொருளுரைக்கு அந் நூலுரையில் அடிப்படையில்லை யாகலான்,

அது பொருந்தாவுரையும் என்க. - மேலும் 'அறத்தாறு’ என்பது அறவழி என்றுதான் பொருள் பெறுமேயன்றி, அறப் பயனையோ பயனின்மையையோ முழுமையும் அது குறிக்காது என்றும் அறிக இனி, பாவாணரும் பரிமேலழகரையே ஒட்டியுரைத்து, இதுவே ஆசிரியர் கருத்து என்பதை வலியுறுத்தி, அதற்கவர் ஆங்காங்கு நூலுள் கூறும் கூற்றுகளையும், பல்பிறவியும், பழவினையும் பற்றி அவர்க்கிருந்த நம்பிக்கையையும் கூறி, அதன் மேலும், இடைக் காலத்து ஒளவையார் பாடலையும், கிறித்தவத் துறவியார் போப் அவர்களின் மொழிபெயர்ப்பையும் சான்று கூறி, அக்கருத்துக்கு வலிவூட்ட முயன்று, இறுதியில், - . . . . . "பல்லக்கைச் சுமப்பாரையும் அதில் ஏறிச் செல்வானையும் காட்டி, 'இதுதான் அறத்தின் பயன் என்று கூறாதே என்னும் உரை