பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

அ - 1 - 4 அறன் வலியுறுத்தல் - 4

அறவோர்க்கு அவர்களின் எஞ்சிய வாழ்க்கையின்வழி, மேடு பள்ளங்களின்றிச் சமநிலையாகி, எளிமையான செலவுக்கு போக்குக்கு உகந்ததாகிவிடும் என்பது இதன் திரண்ட கருத்தாகும்! இச் செய்யுளில் உவமை உவமேயத்துடன் கலந்து உருவகமாகி நின்றது. 2. விழ்நாள்- செய்யத் தவறும் நாள். செய்யாது ஒழியும் நாள். 3. படா.அமை - படாமல், இடையீடு படாமல். 'அ' செய்யுளிசை

அளபெடைக் குறியீடு.

4. நன்று ஆற்றின் - எல்லார்க்கும் நலத் தருகின்ற பொதுநல அறச்

செயல்களைச் செய்யின்,

5. அஃது - அவ்வறச் செயல்கள் செய்யும் கடமை தவறாத நிலை,

8. வாழ்நாள் - மாந்த உயிர் உலகில் தோன்றி மறையும்வரை

வாழ்வதற்குரிய காலம் நாள்.

- மாந்தப் பிறவி தவிர மற்ற கீழ் நிலை உயிர்கள் உயிரோடு இருப்பதற்கு வாழ்க்கை என்று பெயரில்லாததைக் கருதுக அவற்றினது 'உயிர்க்கும் நாள் எனப்பெறும்.

ஈண்டு வாழ்நாள் என்பதற்குப் பரிமேலழகர் உள்ளிட்ட பலரும், அனைத்துப் பிறவிகளும் உடம்போடு உயிர் தொடர்பு கொள்ளும் நாள் என்று பொருள் கூறுவர்.

அஃதாவது, அறியாமை (அவிச்சை, அஞ்ஞானம், செருக்கு (அகங்காரம், அவா (ஆசை, விழைவு (விருப்பு, வெறுப்பு என்னும் ஐவகைக் குற்றங்களால் வருகிற நல்வினை, தீவினை என்னும் இருவகை வினைகளும் உள்ளவரைக்கும், உயிர் உடம்போடும் கூடிநின்று, அவ்விரு வினைகளின் பயன்களாகிய இன்ப துன்பங்களிரண்டையும் துய்க்கும் ஆதலால், அக்காலம் முழுவதும் வாழ்நாள் என்று பரிமேலழகர் போலியர் விரித்து விளக்கப்படுத்துவது பொருந்தாது. - மேலும், குறள் 325இல் வரும் வாழ்நாள் என்பதற்கு இக்கால் பிறந்து வாழும் நாள் என்றே பொருள் கூறும் பரிமேலழகர், இங்கு மட்டும், அனைத்துப் பிறவிகளையும் உள்ளடக்கிய வாழ்வு நாள் என்று எவ்வாறு பொருள் கொண்டார் என்பது அவர்க்கே புலனாம் என்க. . - - 7. வழியடைக்கும் கல் - வாழ்க்கையில் உள்ள பள்ளங்களை அடைவு

செய்து நிரவல் செய்ய உதவும் கல். இதைப் பிறவிவழியைத் தடுத்து நிறுத்தும் கல் என்பது சிறிதும் ,

பொருந்தாது என்க. . . . . . .