பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்

3



இத்தகு பெருமைப் பாட்டிற்கும் திருக்குறள் என்னும் இந்நூலே, குறைவற நிற்கும் ஒரு நிறைவுணர்வு வெளிப்பாட்டுச் சான்றாகும் என்க.
இத் தமிழியல் உறுதிப் பொருள்கள் மூன்றின் தெறிப்புகளும் தெரிவிப் புகளும் பழந்தமிழ் இலக்கியப் பரப்பு முழுவதும் பதியப்பெற்றுள்ளதைக் கீழ்வரும் எடுத்துக்காட்டுகள் உறுதி செய்கின்றன.
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை'
- தொல் : 1038:1-2
'அந்நிலை மருங்கின் அறம்முத லாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப'
- தொல் 136
அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெருமதின் செல்வம்
- புறம் 28.15-16
சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்துவழிப் படுஉம் தோற்றம் போல
- புறம் 31.1-2
அறம் பொருள் இன்பம் என்றம் மூன்றின்
- கலி: 141.3
தோற்றம்சால் தொகுபொருள்'
- கலி:17
(தொகுபொருளாவன அறமும் பொருளும் இன்பமும் என்பர்
உரையாசிரியர்)
வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இருதலையும் எய்தும்
— நாலடி 28