பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

156


திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார். 156

அடிப்படையிலேயே தோன்றி இயங்குவதால் என்க.

எனவே, ஒவ்வொரு பொதுநல வுணர்வையும் செயலையும் இஃது அறந்தானா அஃதாவது இது பொதுநலம் கருதியது தானா என்று தன்னாய்வு செய்து, கொள்ள வேண்டும் என்றார். அது போலவே உலகோர் பழிக்கின்ற தவறான செயலையும் தவிர்க்குமுன் ஆய வேண்டும் என்றது, தன்னலம் போல் பிறர் பழி கூறிவிடுவதாலேயே உண்மையான சில பொதுநலவுணர்வுகளும், செயல்களும் தவிர்ந்துவிடக் கூடாவென்பதற்காகவும் என்க.

- அஃதாவது, தன் பொதுநலச் செயல்களுக்கு ஒர் ஊர்தி தேவை என்று கருதுவான் ஒருவன், அதன் செலவைத் தனக்கோ, தன்னைச் சார்ந்தார்க்கோ பயன்படுத்துவது சரியன்று என்று ஆய்ந்தெண்ணித் தவிர்ப்பதும், அதைப் பொது நலச் செயல்களுக்கே பயன்படுத்துவதை ஏற்பதும், முதனிலை ஒர்வுக்கு (ஆய்வுக்கு எடுத்துக்காட்டு, - இல்லாதார்க்கு உண்டி, உடை தருதற்கும், கல்லாதார்க்குக் கல்வி நலம் கொடுத்தற்கும் முயன்ற ஒருவன், அதற்கெனத் திரட்டும் அல்லது திரளும் ஈட்டத்தில், தானும் பயன்கொள்ளுவதாகக் கூறும் பழியை மறுத்துத் தன்னலமின்மையை மெய்ப்பித்து, மேலும் அதிலீடுபாடு காட்டுவதன்றிப் பிறர் பழித்தார் என்பதனான், தான் கொண்ட அறச்செயலைக் கைவிடலாகாது என்பது, இரண்டாம் நிலை ஒர்வுக்கு எடுத்துக்காட்டு. 2. இஃது உண்மை அறச்செயல்களால் வரும் நற்கூறுகளையும், போலி அறச்செயல்களால் வரும் பழிக்கூறுகளையும் ஒருவன் ஆராய்ந்து அதில் ஈடுபட வேண்டும் எனும் எச்சரிக்கை கூறியது

峦菸, r

O