பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 . அ - 2 - இல்லறவியல் - 5

பின் உடலை விட்டு வெளியேறிச் சென்று, துன்பமும் பிறவியும் அற்ற, இன்பமே நிறைந்திருப்பதாகக் கற்பனை செய்துகொண்ட வேறு உலகமான துறக்க (மோட்ச உலகத்தையும் வீடு, என்னும் சொல்லால் குறித்தனர்.

வீடு துறக்கம் - மோட்சம். அகம் - உள்ளத் தொடர்புக்கும் உடல் தொடர்புக்கும் உரியாளொடும், உரியவர்களோடும் வாழும் வாழ்விடம்.

இனி, ஆண் ஒருவனுக்கு ஒரு பெண்ணே உயிர், உள்ளம், உடல் ஆகியவற்றின் தொடர்புக்கு உரியாளாகி நின்ற மக்கள் தோற்றத் தொடக்கக் காலத்தில், அவள் தங்கி வாழும் வாழ்விடத்திற்கும், அப்பெண்ணையே உடைமையாளாக்கி, ஆண் அதனின்று வெளிச் சென்று வாழ்வியல் பொருள்களைத் தேடி வரும் பணியைத் தனக்கென ஒதுக்கிக் கொண்ட அந்தப் பொழுதில் அவ் வாழ்விடத்துக்கு அவள் உரியாள் என்றுணர்த்தும் உரிமைச் சொற்கள் அவ்வாழ்விடத்தின் அடிப்படையிலேயே தோன்றின. அவை இவை: .

இல்லம் - இல்லாள் - இல்லக் கிழத்தி (கிழத்தி உரியவள்) மனை - மனைவி - மனைக்கு உரியவள் - மனைக் கிழத்தி. வீடு வீட்டுக்காரி - வீட்டுக்குரியவள். அகம் - அகத்துக்காரி (ஆத்துக்காரி அகமுடையாள் - (ஆம்படையாள் பிற்கால ஆரிய வழக்கு, குடும்பம் - குடும்பினி - குடும்பத் தலைவி, மனைவி. х

இவையன்றி இந் நூலாசிரியர், பெண்ணை ஆணுக்கு உரியவள், உடைமையள் என்னும் பொருள்களில் மட்டுமே கொள்ளாமல், அவளின் வாழ்வியல் பெருமையும் கருதி வாழ்க்கைத் துணை 5, என்னும் ஒரு தனிச் சிறப்பும், சம உரிமைத் தகுதியும் தந்துள்ளார் என்க. இத்தகு பெருமையை வேறு எந்நூலாசிரியரும் எங்கும் பெண்மைக்குத் தந்திலர் என்பது கருதி மகிழற்பாலது. - மேலும், மனைவி, இல்லாள் என்பன வெறும் மனைக்குரியவள், இல்லத்திற்குரியவள் என்று இடப்பொருள்வழிச் சொற்களாக உள்ளன. மனைக்கும் இல்லத்திற்கும் உரியவர் பலராயுமிருப்பர். கணவனை யிழந்த தாய், மூத்தாள், தங்கை முதலியோர்கட இல்லத்துக்குக் குரியோராக விருந்து, இல்லாள், மனைவி என்னும் பெயர்களுக்கு வினைவழிப் பொருளுடையவராகலாம். ஆனால் வாழ்க்கைத் துணைவி என்னும் சொல் அவ்வாறன்று. இது தனிப் பொருட் சிறப்புடையது. -இவ்வாறு உரிமைச் சொற்களும், உடைமைச் சொற்களும், உறவுச் சொற்களும் பெருமைச் சொற்களும் தோன்றுவதற்கு நெடுங்காலத்திற்கு முன்னரே, ஆண் என்றும் பெண் என்றும் பாலியல்