பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

162


'திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார் 162

வேறுபாட்டுச் சொற்கள் தோன்றியிருந்தன என்க. அவற்றின் பொருளும் வருமாறு: ஆண் - ஆள் ஆளுமைக்கு, ஆட்சிக்கு உரியவன். இங்கு ஆட்சி என்பது, தொடக்கத்தில் அரசாட்சியைக் குறித்திருக்க வழியில்லை, பெண் - பெட்புக்கு, விரும்புதற்கு, இணைதற்கு உரியவள். இனி ஆண்கள் அனைவரும் ஆண்கள் என்னும் சிறப்பிலக்கணத்திற்குள் அடங்குபவர் அல்லர். அதே போல், பெண்கள் அனைவருமே பெண்கள் எனும் சிறப்பிலக்கணத்துள் அடங்குபவர் அல்லர். - இவற்றின் மேல் விரிவெல்லாம் இதன் நிறைவுரையில் காண்க - இனி இவ்வதிகாரத்துள், இல்வாழ்க்கைக்குரிய ஆட்சித் தலைவனை இல்வாழ்வான் என்பார். இஃது இல்வாழ்க்கை மேற் கொண்டவனைச் சிறப்பித்தது. - - இங்கு உலகின் அனைத்து வாழ்வியலுக்கும் இல்லிருந்து வாழும் வாழ்க்கையே மூலமும், முகாமையுமாகலின், அதன் சிறப்பியல்களையும் தேவைகளையும் முறையே கூறுவார். - இனி, இதுவும், இதைத் தொடர்ந்த அனைத்து வாழ்வியல் கூறுகளும், அனைவர் க்கும் பொதுவாகிய அறவுணர்வை அடிப்படையாகக் கொண்டவாகலின், இஃது அறன் வலியுறுத்தலின் பின் வைக்கப்பெற்றது என்க. - பொதுவான இல்வாழ்க்கையின் தன்மைகளையும் நன்மைகளையும் எடுத்துக் கூறுவதால், இஃது இல்வாழ்வின் புறக்கூறு என்க.

O

சக. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை. - 41

பொருள் கோள் முறை :

இயல்புடைய மூவர்க்கும், இல்வாழ்வான் என்பான் நல்லாற்றின் நின்ற துணை.

பொழிப்புரை தம்தம் இயல்புகளினின்று மாறாத தன்மைகளைக் கொண்ட துணை வேண்டிய உறவோர், அறவோர், இறைவோர் ஆகிய மூவர்க்கும் குடும்ப வாழ்வை அமைத்துக் கொண்டவன் என்பான், பொது நல அறமுறைகளின்படி நிலையான துணையாக இருக்கக் கடமைப்பட்டவன் ஆவான,