பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 63 அ - 2 - 1 -இல்லறவியல் - 5

சில விளக்கக் குறிப்புகள் :

1. இல் வாழ்வான் என்பர்ன் - இல்லறத்தை மேற்கொண்டு குடும்பத்துடன் வாழ்பவன் எனப் பெறுபவன். இல்வாழ்வான் என்பதே இல்வாழ்க்கையை மேற்கொண்டவன் என அமையுமேனும், 'என்பான் என்று கூட்டியது, பிறர் பழித்தலில்லாததும், (49 பொது நல அறந்தழுவியதுமான (45 இல் வாழ்க்கையை மேற் கொண்டவன் என்று சிறப்பித்தற் பொருட்டாம் என்க.

2. இயல்புடைய மூவர்க்கும் - தம் தம் இயல்புகளினின்று மாறாத தன்மைகள் கொண்ட மூவர்க்கும். - மூவர் எவரெனக் கூறாது எண்ணிக்கையான் ஆசிரியர் கூறியது, உரையாசிரியர்களிடம் குழப்பத்தையும், மயக்கத்தையும், தவறான பொருள்கோளையும் கிளர்வித்தது என்க. - மூவர் என்பதற்குப் பரிமேலழகரும், மணக்குடவரும், பரிதியாரும், காலிங்கரும், அவர் மதம் பற்றிப் பிற்காலத்துச் சிலரும், மாணவகனையும் (பிரமசாரியையும், கானுறைவனையும் (வானப் பிரஸ்தனையும், முற்றத் துறவியையும் (சந்நியாசியையும் பொருள்

கொண்டனர்.

- இவர்களை இவ்வாறு கொண்டது, ஆரிய வியலின்படி, மாந்தனின் நால்வகை நிலைகளுள், குடும்ப வாழ்வினன் (கிருகஸ்தன்), அந்நால்வருள் ஒருவனாகித் தனித்து நின்றமையால், அவனை, மற்ற மூவர்க்கும் துணையாக நிற்கக் கடவன் என்று கருதினர் போலும்! இந்நிலைகள் பகுப்பும், வாழ்முறை வகுப்பும், அவர்களுக்காக்கிய அறவழித் தொகுப்பும் பிற கோட்பாடுகளும் முடிவுகளும் தமிழியலுக்குப் பொருந்தாவாகலின், இவ்வுரையும் பொருந்தா வென்று தவிர்க்க.

மேலும், இவர்களை உலகியல் அளவான் எண்ணுவதானாலும், மாணவகன் (பிரமசாரியன்) ஒவ்வோ ரில்வாழ்வானின் உறுப்பாகவே இருப்பானாகலினாலும், அவன் ஒராசிரியனிடமோ, பாழியிலோ இருந்து கற்பானாகையினாலும், பொதுவில் அவன் இல்வாழ்வானின் புரத்தலுக்குரியவனாகக் கருதுதல் இயலாதென்க இனி, கானுறைவோனும் (வானப்பிரஸ்தனும், தன் கிழத்தியுடன் கானில் வாழ்வதனாலும், முற்றத் துறவி எவர் தொடர்பும் வேண்டானாகையினாலும், இல்வாழ்வான் இல்லை விட்டுக் கானகம் சென்று, அவர்களைப் புரத்தலும் இயலாததுடன், தேவையு மன்றாகிவிடும் என்க.