பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 டஅ. 2.1-இல்லறவியல் 5

துணையாக இருக்க வேண்டுவதில்லை என்னும் குறிப்புணர்த்தினார் என்க. - - - -- - - - - -- - . . . - --- - - 4. நின்ற துணை நிலையான துண்ை. அஃதாவது, துணையாக இருக்க வேண்டுவது கடமை என்று உணர்த்தினார். . - அடுத்த குறளில் துணை என்ற சொல் மட்டும் வருதல் காண்க அங்கு அது 'விருப்பச் செயல்' என்றளவில் பொருள் தரும். 5. இதனால், இல்வாழ்க்கை மேற்கொண்டவன் ஆற்ற வேண்டிய கடமையும், அதன் வரையறையும், அக் கடமையாற்றப்பட வேண்டியவர்களும், அக்கடமை பெற அவர்களுக்குரிய தகுதியும்

ஆகிய இலக்கணங்கள் கூறப்பெற்றன என்க. 6. இல் வாழ்வான் என்பான் என்பதை என்ப' என்று பாடங் கொண்டு, அதனை அசை என்று விடுத்தாரும் உளர். O

ச.உ. துறந்தார்க்கும் துவ்வா. தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை 42

பெருள் கோள் முறை

இல்வாழ்வான் என்பான், துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும் துணை. , - . . . . . . . . . .”: * * * * * *

பொழிப்புரை இல்லறம் மேற்கொண்டு வாழ்கின்ற குடும்பி என்பவன்,

தங்கள் உற்றம், சுற்றம் நட்பு ஊர், நாடு முதலியவற்றைவிட்டுப்பிரிந்து வெளியேறி வந்து தனித்து நிற்கும் ஏதிலியர்க்கும், துவ்வுதல் உணவு, உடை, உறையுள் இல்லாத ஏழைய்ர்க்கும், தன் சுற்றத்தும் உற்றத்தும் அண்ட்ை அயலிலும் உயிர்துறந்தார்க்கும், அவ்வப் பொழுது உதவியாக இருக்க வேண்டியவன். - - - - - - - - - - -

சில விளக்கக் குறிப்புகள் :

மிகவும் வேறுபடும் தன்மையுள்ள குறள்களில் இதுவும் ஒன்று. இதிலுள்ள இறந்தார் என்னும் சொல்லுக்கே பொருள் வ்ேறுப்ர்டுக்ள் மிகுதி. - -