பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

168


திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 168

2 துறந்தார் - இங்குத் துறவிகள் அல்லர். தம் உற்றார் உறவுகளை விட்டுப் பிரிந்து வெளியேறி வந்த ஆதரவற்றவர்கள். ஏதிலிகள் (அகதிகள்) துறத்தல் - விடல் (310) பிரிதல் (188) 3. துவ்வாதவர் நுகர்ச்சியில்லாதவர். உணவு, உடை, உறையுள் முதலிய வாழ்வியல் நலன்களை நுகர்ந்து (அனுபவித்து அறியாத ஏழைகள். துய் - துவ் - நுகர்ச்சி. துய்ப்பு - துப்பு - துவ்வு. 4. இறந்தார் - உயிர் துறந்தார். குடும்பத்துள்ளோ, உறவுக்குள்ளோ, அண்டையயலுக்குள்ளோ, வேறு ஏதிலியாகவோ உயிர்விட்ட யாவர்க்கும், உயிர் துறந்தார்க்கு உதவுதல் உலக மாந்தப் பொதுநிலை உதவியே. அவரை மண்ணிலிடவும் தீயிற்சுடவும் எல்லா இல்லறத்தாரும் உதவுதல். 5. துணை - முன்னைய குறளில் நின்ற துணை என்றது. தவிர்க்க இயலாக் கடமையை. இதில் துணை என்றது பொதுநிலை உதவியை, இஃதொரு விருப்பச் செயல் என்க. அஃதாவது நம் நிலை நோக்கித் துணையாக இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். C

சங். தென்புலத்தார் தெய்வம் விருந்(து)ஒக்கல் தான் என்றாங்(கு) ஐம்புலத்துஆறு ஓம்பல் தலை. - 43

பொருள் கோள் முறை : இயல்பு

பொழிப்புரை : தென்னிலப் பகுதிகளில் உள்ளவர்கள், வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தெய்வச் சான்றோர்கள், தன்னைத் தேடிவரும் புதிய தொடர்பாளர்கள், தன்னோடொத்த உறவினர்கள், தான் - என்னும் ஐந்து நிலையினரிடத்தும் அறவுணர்வைப் பேணிக் கடைப்பிடித்தல் ஒவ்வோர் இல்லறத்தானின் தலையாய கடமையாகும்.

சில விளக்கக் குறிப்புகள் :

இதுவும் முந்திய குறள்களைப் போலக் கருத்து வேறுபாடு மிகவும் உடையதே. இதிலுள்ள தென்புலத்தார் என்பதற்குப் பலரும் பலவாறு பொருள் தருவர். 2. தென்புலத்தார் - தெற்கில் உள்ள நிலத்தவர். இதற்கு அழகிய