பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 69

அ - 2 -1 -இல்லறவியல் - 5

இனிய தெளிந்த அறிவுள்ளவர்கள் அவ்வாறுள்ள மெய்யறிவினார் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் பொருந்தாது என்க. புலம் - முதற்பொருள் இடம்; இரண்டன் பொருளே அறிவு.

ஒருவரின் அறிவைத் தெளிந்த அறிவு என்றும், மெய்யறிவு என்றும் ஆராய்ந்து தேர்தல் யார்க்கும் எளிய செயலன்று. பிறர்வாய்க் கேட்டறிதலும் உலகியற் பிழை தரும் இல்லறத்தான் ஒருவன், அவ்வாறு தேர்ந்து, ஒருவரையோ அத்தகைய சிலரையோ பேனிக் கொள்ளுதலும் புரத்தலும் இயலாதென்க. நூலாசிரியரும் அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல் (443 என்று உணர்த்துதல் பெரியாரை ஒம்பும் கடினத்தை மெய்ப்பிக்கும்.

பரிமேலழகர், மணக்குடவர், பரிதி, காலிங்கர் முதலியோர் கூறும் 'பிதிரர் உரை கற்பனையும் ஏமாற்றுமாம். சிலர் உயிர் துறக்கும் தறுவாயில் உள்ள முதியவர் என்று கொள்ளுதலும் இட்டுக் கட்டுதல் ஆகும். .

தன் குடும்பத்து இறந்தவர்கள் தெற்குத் திசையில் அஃதாவது கூற்றுவன் திசையில் உள்ளனராகக் கருதி, அவர் க்கு ஆண்டுதோறும் நினைவுவழுத்தல் செய்வது இல்லறத்தார்க்குக் கடன் என்று கூறுதலும் அறிவியலுக்கும் மெய்யறிவியலுக்கும் பொருந்துமாறில்லை. நினைவு நாள் கொண்டாடுவது விருப்பின்பாற்படுவது. கடமையின் பாற்படுவதன்று. அத்துடன் அந்நினைவு போற்றலும் ஒம்புதலாகாது.

எனவே, புலம் என்பதற்கு இடப்பொருள் பொருந்துவது; வெளிப்படையானது; கண்டுகொள்ள எளிமையானது; இயல்வது. ஆகவே, தென்புலத்தார் என்பதற்கு தென்பகுதி நிலத்தவர் எனும் பொருளே பொருந்துவது என்க. இனி, தென்பகுதி நிலத்தவர் தமிழினத்தவர் ஆவர். நூலாசிரியர் தமிழகத்தைத் சேர்ந்தவராகலின், தென்புலத்தார் - என்னும் இவ்வொரு சொல்லே திருக்குறளில் இந்நூலாசிரியரின் இனத்தையும் மொழியையும் குறிப்பால் புலப்படுத்தும் சொல்லாக உள்ளது. அவை இன்றியமையா ஒரு தேவையை நோக்கியும் உணர்த்தப்பெற்றனவென்க. என்னை? நூலாசிரியர் காலத்துத் தமிழ் நாட்டில் வேற்றினத்தவரான ஆரியர், அரசியல், குமுகியல் வலுப்பெற்றத் தமிழினத்தவரையும் அவர் தாய்மொழியாகிய தமிழையும், அவர்தம் உயர்மரபு வாழ்வியல் நலன்களையும், கலை பண்பாடுகளையும் சிற்சிறிதாக அழிக்கவும்,