பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

170


திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் - 170.

அவர்தம் அரைச் செயற்கை மொழியாகிய சமசுக்கிருதத்தையும் ஆரியவியலையும் இவர்களிடம் புகுத்தவும் முற்பட்டனர் என்பது தமிழின வரலாறு.

அக் கொடுநிலைகளைக் கண்டு உளங்குமுறிய நூலாசிரியர், அனைத்து நிலையானும் ஏற்கனவே உருவாகி நின்ற தமிழர் அறத்தையும், குமுகியல் ஒழுக்கப் பண்பாடுகளையும் மறைமுகமாகவேனும், கட்டிக்காக்க உள்ளுறுதி பூண்டு இவ்வரும் பெரும் வரலாற்று நிலைப்படுத்த நூலை எழுதிப் போந்தார் என்பது, இந்நூல் தொடர்பான அகப்புறச் சான்றுகளாலும் விளக்கங்களாலும் அரிதின் ஆராய்ந்து அறுதியிட்டு உறுதிசெய்த வரலாற்றுச் செய்தியாகும்.

நேரடியாகவும் வெளிப்படையாகவும் இவ்வினத்து.மொழி, இன, பண்பாட்டு நலன்களைக் காக்க வெழுந்த நூலிது என்று அவர் காலத்து அறியப் புகுந்தால், ஏனைய வரலாற்று இலக்கிய அறிவியல் தமிழ் நூல்களை ஆரியர்கள் அழித்தது போன்றே, இதுவும் அழிக்கப் பெற்றுவிடும் என்பதை, அற்றைச் சூழ்நிலையால் கண்டுணர்ந்த ஆசிரியர், இந்நூலுள், ஆங்காங்குக் குறிப்புரைகளாலும் குறிப்புச் சொற்களாலும், தம் தமிழின வழியினர்க்கு அம்மரபு நலன்களை உணர்த்திச் சென்றுள்ளார். அவற்றுள் ஒன்றே இத் தென்புலத்தார். என்னும் அரிய சொல்லும்ாம் என்க:நூலுள் வரும் பிற குறிப்புகளெல்லாம் அவ்வவ்விடத்து உணர்த்தப் பெறும் அதுவன்றி இம்மெய்ப்பொருள் நிறைவுரையுள் இவ்வரலாறெல்லாம் அகப்புறச் சான்றுகளுடன் நன்கு விளக்கப்பெறும். -

இவ்வடிப்படையில், தென்புலத்தார் என்னும் இச்சொல், தமிழ் நாட்டின் தெற்குப் புலத்தில் உள்ள் இலங்கை, பிசி, மொரீசியசு சிங்கை, மலேசியா, ஆப்ப்ரிக்கா, ஆத்திரேலியா, மடகாசுகர் முதலிய தென்புலங்களில் எல்லாம் சிதறி வாழும் தமிழர்களையும் குறித்ததென்கஅவர்களைப் போற்றிக்கொள்ள வேண்டும் என்னுங் குறிப்பையும் குறித்ததென்க. இச்சொல் ஆசிரியர்காலத்திற்கு வெகு

அல்லது.தென்னுலகு