பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

172


திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார் 172

விளக்கங்களை நிறைவுரையில் காணலாம்.

முன்னர் வாழ்ந்திருந்து மறைந்துபோன இந்நூலாசிரியர் போலும் தெய்வச் சான்றோர்கள், மக்கள் நலனுக்கென்றே தம்மை முற்றுமாக ஈகப்படுத்திக்கொண்டு தம்மையே இழந்துபோன அறநலப் பெரியோர்கள் ஆகியோர், இல்லறத்தாரால் நினைந்து பாராட்டிப் பின்பற்றத்தக்கவராவர். 3. விருந்து இல்லறத்தாருடன் ஏதோ ஒருவகையில் தொடர்பு கொள்ள வரும் புதியவர்கள். அவர்களும் பேணிப் புரந்து கொள்ளத் தக்கவர்கள். குமுக உறவுக்கும், வாழ்வியல் வலிமைக்கும் நட்பாடலுக்கும் அவர்கள் தேவையாகலின். 4. ஒக்கல் - தம்மோடு குடும்பம், மரபு இவற்றுடன் ஒத்தவர்கள், சமமானவர்கள், பொருந்தியவர்கள், இணைந்தவர்கள், உடன்பட்டவர்கள்.

- இவர்கள் உறவினர்கள், சுற்றத்தார் என்று கூறத்தக்கவர்கள். ஒக்கல் - ஒத்தல் - பொருந்துதல், இணைதல், சமமாதல், உடன்படுதல். - இவர்களையும் போற்றிப் புரந்துகொள்ளுதல், இல்லறத்தார்க்கு வலியும் துணையும் மகிழ்வும் நிறைவும் தரக்கூடியதாகலான்.

தான் - அனைத்து நிலையானும் உற்றத்தையும் சுற்றத்தையும், தொடர்பாளர்களையும், முன்னிருந்து மக்களுக்கு உழைத்த தெய்வச் சான்றோர்களையும், குடும்ப முன்னவர்களையும், தென்நிலங்களில் முன்னிருந்து வாழ்ந்த தன் மொழியின மக்களையும் போற்றிப் புரந்து கொள்ள வேண்டிய இல்லறத்தான், தன்னையும் பேணிப் புரந்துகொள்ளுதல் மிகவும் இன்றியமையாததால் அதையும் ஒம்புதற்குரிய ஐந்திடத்தவர்ளுடன் இணைத்தார் என்க. 6. என்றாங்கு - என்ற வகையில் - என்றவாறு. 7. ஜம்புலத்து ஐந்து இடத்தும் ஐந்து வகையினரிடத்தும் 8. ஆறு ஓம்பல் - பொது அறவுணர்வுடன் பேணிப் புரந்து கொள்ளுதல். பெரும்பாலும் உயிரோடு இருப்பவர்களையே ஒம்புதல் இயலுமாகலின், ஈண்டுக் கூறப் பெற்ற ஐம்புலத்தாருள் தெய்வம் தவிர மற்றையவர் உயிரோடுள்ளவர்களே ஆகையினாலும், தெய்வமும் முன்பு உயிரோடிள்ளவர்களே ஆதலின், அவர்கள் நினைவையும் செயலையும் போற்றிப் புரந்து

5