பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ - 2 - இல்லறவியல் - 5

கொள்வது ஒருவகை ஒம்புதல் ஆகையினாலும், இப்பொருளே பொருந்துவதாம் என்க. 9. தலை - இல்வாழ்வார்க்குத் தலையாயது; முகாமையானது - என்க. 10.முதற்குறளில் கூறப்பெற்ற இயல்புடைய மூவர்க்கும், இல் வாழ்வானை நின்ற துணை என்று கூறி அறக்கடமை யாக வலியுறுத்தினார்.

அடுத்த குறளில் துறந்தார்க்கும் துவ்வாதார்க்கும் இறந்தார்க்கும் அவனைத் துணை என்று மட்டும் கூறி விருப்பத் துனை யாக்கினார்.

இதில், ஆண்டுக் கூறிய ஐம்புலத்தார்க்கும் அவனை, ஒம்ப வேண்டிய இன்றியமையா உதவியாளனாக அறிவுறுத்தினார் என்க. 11.இதில், இல்லறத்தான் ஒம்பவேண்டுவனவாகக் குறிக்கப் பெற்ற உறுப்புகள் ஐந்து, அவை தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்பன.

இவற்றுள், தான் என்பது தலையாய் இருந்து பிற உறுப்புகளை ஒம்புதல் வேண்டும் என்று அறிவுறுத்துவதாகக் கொள்ளுதல் வேண்டும். கொள்ளவே, தென்புலத்தாரைக் - கால்களாகவும், தெய்வத்தை - நெஞ்சாகவும், விருந்தைக் கைகளாகவும், ஒக்கலை - உடம்பாகவும், உருவகித்துக் கூறியதாகவும் கருதிக்கொள்ளுதல் வேண்டும். இதில், - தென்புலத்தாரைக் கால்களாகக்கொண்டது, அவர் வழி நடையிடவேண்டும் என்பதாகவும், - தெய்வத்தை நெஞ்சாகக் கொண்டது, இறைமைப் பண்பை வலியுறுத்தியது என்பதாகவும், - விருந்தைக் கைகளாக்கியது, இருகைகளையும் ஒருசேரக் கொண்டு முழுநிறைவான ஈகையறம் மேற்கொள்ளல் வேண்டும் என்பதாகவும், அவர்களைத் தம் கைகள் போல் உதவும் உறுதுணையாகக் கருதல் வேண்டும் என்பதாகவும், - ஒக்கலை உடம்பாகக் கொண்டது, தான் உருவாய் இருந்து, உழைக்கும் பெற்றித்தாயராக அவரைப் பயன்படுத்துதல் வேண்டும் என்பதாகவும், - -