பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்

5


திருக்குறள் மெய்ப்பொருளுரை -பெருஞ்சித்திரனார் 5

'அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே

. - நன்; 10

'அறம் பொருள் இன்பம் வீடென நான்கும்

- சேந் திவா; 286

நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகி

- தண்டியலங் 8.5

திருக்குறளில் வீடு என்னும் கருத்து எவ்விடத்தும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ குறிக்கப் பெறவில்லை என்பது தெளிவு. இதுபற்றிப் பொது முன்னுரையிலும் கூறப்பெற்றது.

இனி, அறம் என்னும் சொல்லின் சுருக்க விளக்கமான பொருள், பொதுமை நல உணர்வு என்பதே ஆகும். அஃதாவது, தனிமாந்த நலன் மட்டுமே கருதாமல், பொதுமாந்தர் பொதுமக்கள்.அனைவருக்கும் உகந்த நலம் கருதும் எண்ணம், உரை, செயல், வகுபாடு, முறைகள் முதலிய அனைத் திற்குமான ஒரு பொருள்பொதி தகுதிச் சொல்லே அறம் என்பது. இவ்வுணர்வு நெறிகள் வகுக்கப் பெற்றவை ஆகலின் அறம் எனலாயிற்று. அறம் வகுக்கப் பெற்றது; வரையறுக்கப் பெற்றது

இதுபற்றிய பல்வேறு விளக்கங்களும் அறன் வலியுறுத்தல் அதிகாரத்துள் மிக விரிவாகக் கூறப்பெறும் அவற்றை ஆண்டுக் காண்க

அடுத்து, திருக்குறளுள் அறத்துப்பால், அறவியல் (பாயிரவியல், இல்லறவி யல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களாகப் பகுக்கப் பெற்றுள்ளது. .

இப்பகுப்பு முறைகள் யாவும் நூலாசிரியராலேயே செய்யப் பெற்றுள்ளன என்றும், செய்யப்பெறவில்லை என்றும் ஆராய்ச்சியாளரிடை இருவேறு கருத்துகள் உள்ளன. இவ்வேறுபாடுகள் அறிவு வளர்ச்சியாலும் காலமாற்றத்தாலும் கருத்துப் புகுத்தத்தலும் இயல்பாகத் தோன்றி நிற்பனவேயாகும். எல்லாராலும் விரும்பப்பெறும், மதிக்கப்பெறும் ஓர் உலக உயர்வு ஒப்பற்ற நூலுள் இத்தகைய பல்வேறு குளறுபடிகள் நிகழ்வது கூடுவதேயாகும். ஆனால், சிதைத்துப்பெற்ற அல்லது மாற்றப்பெற்ற அல்லது மறைக்கப்பெற்ற அல்லது திரிக்கி பெற்ற அல்லது அழிக்கப்பெற்ற கூறுகள் இன்னின்ன அல்லது இவை வைதாம் என்று ஆய்ந்து காண்டது முற்றிலும் இயலாதது.