பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

176


'திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார் 176

சரு. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது. 45

பொருள் கோள் முறை :

இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்து ஆயின்,

பொழிப்புரை இல்லத்திலிருந்து ஒருவன் மனைவியொடும் மக்களொடும் வாழ்கின்ற வாழ்க்கை உண்மை, அன்புணர்வு உடையதாகவும், பொது அறவுணர்வு கொண்டதாகவும் இருக்குமாயின், அதுவே பண்புடையதாகவும் பயனுடையதாகவும் அமைந்ததாகும். சில விளக்கக் குறிப்புகள் :

1. அன்பும் அறனும் - அன்பு, குடும்பத்தில் வேரூன்றி நிற்பது, அறன், குடும்பத்தாரைத்தாண்டி, புறத்துள்ளாரிடம் பொதுவுணர்வுடன் இயங்குவது. 2. பண்பும் பயனும் அது - கணவன் மனைவியரிடை ஒருவர் மேல் ஒருவர் க்கு உண்மை அன்பு இருக்குமாயின், அஃது அவர்களிடையே பண்பை உருவாக்கும். அன்பு உள்ளவரிடமே பண்பு இருக்கும்.

அது போலவே ஒருவரிடம் பொது நலவுணர்வாகிய அறவுணர்வு இருக்குமாயின், அவர் வாழ்க்கை அவருக்கும் பிறர்க்கும் பயனுடையதாக இருக்கும். அன்பு பண்பையும் அறம் பயனையும் தரும்; இல்வாழ்க்கைக்கு இரண்டும் அடிப்படை உணர்வுகள் என்க. O

சசு. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவ தெவன். 46

பொருள் கோள் முறை :

இல்வாழ்க்கை அறத்து ஆற்றில் ஆற்றின், புறத்து ஆற்றில் போஒய் எவன் பெறுவது.

பொழிப்புரை பொது நலம் கருதும் அறவுணர்வுடன் ஒருவன் இல்லிலிருந்து வாழ்க்கையை நடத்திச் செல்வானானால், அவன், இல்லறத்திற்கு வேறான