பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

அ - 2 -1 -இல்லறவியல் - 5

துறவு நெறியில் சென்று பெறப்போகும் பயன்தான் என்னவாக இருக்க முடியும்? ஒன்றுமில்லை என்க.

சில விளக்கக் குறிப்புகள்:

I.

2.

அறத்து ஆறு - பொதுநலன் கருதிய வழி.

புறத்து ஆறு பொதுநலன் கருதிய இல்லற வழியல்லாது, தனிநலன் கருதும் துறவு வழி. என்னை: துறவு என்பது தான் மட்டுமே உயிர்ப்பயன் கருதி மேற்கொள்ளும், இல்லறம் துறந்த நெறி. - இதில், புறத்தாறு என்பதற்குப் பலரும் இல்லைவிட்டு வனத்துச் செல்லும் நிலை, துறவறம், இல்லறமல்லாத நெறி, 'பாவநெறி', 'அறவழியல்லாதது, வேறு வேறு வழிகளில், 'இயற்கைக்கு மாறுபட்ட வழி என்றவாறு பல வகைகளிலும் பொருள் கொள்ளுவர். ஆசிரியர், அறம் என்னும் சொல்லை 'இல்லறம் என்பதில் போலவே துறவறம்' என்பதிலும் கையாண்டுள்ளார் என்பதை நாம் நினைதல் வேண்டும்.

ஆனால், 'அறத்தாறு' என்பதற்குப் புறத்தாறு என்பது மறுதலையானது என்பது வெளிப்படை புறத்தாறு என்பதை ஓர் அறக்கூறு என்பதாக ஏற்றுக் கொண்டால், அதற்கு அகத்தாறு என்பதே மறுதலையாக அமைதல் முடியும்.

அகத்தாறு புறத்தாறு. அகத்தாறு இல்லறம் புறத்தாறு துறவறம் ஆகும்.

இனி, திருவள்ளுவர் இரண்டு நெறிகளையுமே சிறந்தவை என்றே ஏற்றுக்கொண்டாலும், இரண்டையும் இணைத்துப் பேகம் பொழுது, அகத்தாறாகிய இல்லறமே புறத்தாற்றினும் சிறந்தது என்பர். இல்லறத்தை முதற்கண் வைத்ததும், அறனெனப் பட்டதே

இல்வாழ்க்கை (49) என்பதும் அகத்தறமே மேல் என்று அவர்

கருதுவது உணர்த்தலாயின.

இரண்டறத்தையும் அவர் ஏற்றுக்கொள்வது புலப்படுவதால், ஒருவன் தன் பிறவி வாழ்க்கையில் இரண்டினையும் மேற்கொள்வதையே அவர் விரும்புகிறார் என்று தெரிகிறது. அஃதாவது, திருவள்ளுவர்க்கு அகத்தாறு இல்லறம்)

ஆற்றிவிட்டு, இறுதிக்காலத்துத் துறவறமாகிய புறத்தாறு

மேற்கொள்வதே சிறந்ததெனத் தெரிகிறது. துறவறத்தையும் ஒர் அறம் என்று அவர் ஒப்புக் கொள்வதினாலும், நீத்தார் பெருமை' அதிகாரக் குறிப்புகளானும் அஃது உறுதிப்படும்.