பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179.

அ 2.1-இல்லறவியல் 5.

துறவி இல்லறப் பயனை அங்குப் போன பின்னர் எதிர்பார்க்கலாகாது. அத்தகைய மன வெறுக்கை, இயல்பாகக் காலத்தால் வருதல் வேண்டும். அஃது, இளமையிலேயே வந்ததாகக் கொள்ளல் இயலாது.

உடல் இளமையில் உள்ளகாலை, உள்ளம் துறவை மேற்கொள்வது, உள்ளத்தின் உணர்வுகளுக்கும் உடல் உணர்வுகளுக்கும் தோன்றும் ஐம்புலப் போராட்டத்திற்கே இடன் வகுக்கும். ஆகையால், அத்துறவு மேற்கொள்ளல் சாலாது, கூடாது என்றார் என்க. இவ்விரண்டுங்கெட்டான் நிலைகளைத் துறவியலில், "கூடாஒழுக்கம், கள்ளாமை, முதலிய அதிகாரங்களில் நினைவூட்டிக்

கடிவதையும் காண்க

இதன்வழி ஆரிய ೧u667 அடிப்படையில் நிகழ்த்தப்பெறும் வைதிகம், சங்கராச்சாரியம், மற்றும் சமணம், பெளத்தம் முதலிய மதங்களில் உள்ள இளமைத் துறவுகளை வன்மையாகக் கண்டித்தார் என்க. . . . . - . ... . ." போஒய்ப் பெறுவது எவன் - அத்துறவறத்தில் போய் நின்று ஒழுகிப் பெறப்போகும் பயன்தான் எது? ஒன்றுமில்லை என்பதாம் என்க. தனிப்பயனை விடப் பொதுப்பயன் உயர்ந்ததாகலின், அது நிகழும் இல்லறமே துறவறத்தினும் சிறந்தது என்றார்.

போஒய் - அளபெடை இரக்கம் குறித்தது. தமிழியல் நெறி இளமையில் துறவு அன்று. அதுவும் இல்லறம் வெறுத்த துறவறம் அன்று. இன்னும் சொன்னால் புறத்துறவு அன்று. அகத்துறவே

என்க.

4. இச் செய்யுளின் கண், ஆரியவியலின்படி, புனைவும், வெறுக்கையும்

பூண்டு, இல்லறத்தின் நீங்கி, கானகம் சென்று, சந்நியாசம் என்னும்

துறவு மேற்கொண்டு, நோற்றலும் ஆற்றலும் ஒழுகியிருந்து,

பிறப்புறுத்துப் பேரின்ப வீடுபெறும் துறவு மேலாம் என்னும்

கொள்கையை எள்ளல் உணர்வால் இகழ்ந்து கடிந்தார் என்க.

இதன் மேலான விளக்கங்களை எம் நிறைவுரையிற் காண்க

Ö ... ..، ش ، ۵

சன். இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை, 47

பொருள் கோள் முறை :

இல்வாழ்க்கை இயல்பினால் வாழ்பவன் என்பர்ன், முயல்வாருள் எல்லாம் தலை.