பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 அ - 2 -1 -இல்லறவியல் - 5

பொழிப்புரை இல்லறத்தில் இருந்து கொண்டு, மனைவி, மக்களாகிய அதன் உறுப்பினர்களையும், அவர்கள் போலுள்ள பிறரையும், அன்றாடம் அவரவர்களுக்குரிய வாழ்க்கை நெறிகளில் ஈடுபட்டு ஒழுகச் செய்து, தானும் பொதுநல அறவுணர்வில் இழுக்கு நேராதவாறு, வாழ்பவனுடைய இல்வாழ்க்கை ஈடுபாடு, மிகவும் கடினமும், பொறுப்பும், முயற்சியும், பொறுமையும் வாய்ந்ததாகலின், அது, காடு சென்று தவம் செய்பவனுக்கிருக்கும் நோற்றல் பொறுத்தல் தன்மையைவிட மிக உயர்ந்தது.

சில விளக்கக் குறிப்புகள் :

1. ஆற்றின் ஒழுக்கி - இல்லறத்தில் உள்ள ஒருவன், அதிலுள்ள மனைவி, மக்கள், தொடர்புடைய பிறர் அனைவரையும் அவரவர்க் குற்ற வாழ்க்கை நெறிகளில் ஈடுபடச் செய்து,

- இல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இயல்பாக இருக்கும் பொறுப்புணர்வாகும் இது. அஃதாவது இல்லறத் தலைமையுற்றிருப்பவன், அதன் உறுப்புகளாகிய மனைவி, மக்களையும் தொடர்புடைய பிறரையும் நாள்தோறும் அவரவர் கடமைகளைச் செய்யுமாறு இயக்குதல். - இல்லறத் துணைவிக்கு இல்லறத்தை நன்கு கவனிக்க வேண்டிய உத்திகளைக் கூறுவதும், வருவாய் ஏற்றத் தாழ்வுகளிலும் குடும்பத்திற்குற்ற பொதுக் கடமைகளிலும், பெற்றோர்ப் பேணுதல், உற்றார் ஒம்புதல், உறவோர், நட்போர்க்கு உவத்தல் முதலிய நிலைகளிலும் நடத்துகொள்ள வேண்டிய இல்லறக் கடமைகளை நெறிப்படுத்துவதும், மக்கட்குக் கல்வி, தொழில் ஈடுபாடுகளின் தேவைகளையும் ஏற்ற இறக்கங்களையும் கண்காணித்து அவர்கள் ஆற்ற வேண்டிய பொது, சிறப்புக் கடமைகளில் ஈடுபடுத்துவதும் இல்லறத் தலைவனுக்குரிய ஆற்றின் ஒழுக்குதல் ஆகும். - இதற்குப் பரிமேலழகர் தவஞ் செய்வார்ையும் தத்தம் நெறியின் கண் ஒழுகப் பண்ணி - என்று பொருளுரைத்து, பசி முதலிய இடையூறு நீக்கலின் ஆற்றின் ஒழுக்கி என்றார் என்று விளக்கமும் கூறுவர். இஃது, அவர்களின் மதவியலை வலுப்படுத்தவும், நிலைப்படுத்தவும் வேண்டி, அது சார்ந்த துறவியர்க்குப் பேணுதல், புரத்தல் உணர்வை மக்களிடையில் ஊட்டுதற்குக் கொண்ட தந்திர உத்தியே என்க. 'அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றுதல் புறத்தாற்றிற் போயொழுகுதலைவிட உயர்ந்தது என்று கூறியவர், அவ்வாறு போயினாரைப் புரந்து பேணுதல் வேண்டும் என்று கூறுவரோ என்று உன்னுக.