பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

182


திருக்குறள் மெய்ப்பொருளுரை. பெருஞ்சித்திரனார் 182

- எனவே, அவருரை பொருந்தாதென்க.

இனி, பாவாணரும் அவரையே அடியொற்றி மிடி செய்தார் என்க.

2. அறனிழுக்கா இல்வாழ்க்கை - பொதுநல அறவுணர்வுகளில் இழுக்கு நேராதவாறு நெறியின் இயங்கும் இல்லறவொழுக்கம். என்னை? குடும்பத்து வாழ்வான் பொதுவுணர்வில் ஈடுபடும் பொழுது, தன் குடும்பச்சுமை நீக்கத்திற்குப் பொதுப் பயனைப் பயன்படுத்துதல், பொது நிலையில் தனக்கேற்பட்ட பெருமதிப்பைத் தன் குடும்ப ஏற்றத்திற்கும், மனைவி மக்கள் பிழைப்பு வாய்ப்புக்கும் சார்பாக்கிக் கொள்ளுதல் முதலிய நிலைகளில் ஈடுபட்டு, இழுக்கைத் தேடிக் கொள்ளாத இல்லறவொழுக்கம் என்க. 3. நோற்பாரின் நோன்மை உடைத்து - இவ்வாறான இல்லறக் கடமைகளிலும், இயக்கச் சுமைகளிலும், மனம் நெகிழாதவாறு, பொறுமையுடன் ஆற்றி இருந்து, மேலும் மேலும் அவ் வில்லறவொழுக்கத்தில் தொடர்ந்து ஈடுபடுதலாலாகிய நோன்மை அஃதாவது பொறுமை. பசி, விடாய், முதலிய அடக்கி, இயற்கை ஏதங்களை வென்று, தவஞ்செய்தற்குப் போதுமான ஆற்றலை விடவும் மிக்குத் திறன் வாய்ந்தது. .

என்னை? இல்லறவொழுக்கம் உடையானின் பொறை, பிறர்க்காகத் தான் துன்புறும் ஈகம் (தியாகம் சான்றது.

தவம் நோற்கும் துறவியொருவனின் பொறையோ தனக்காகத் தானே துன்புறும் தன்னலம் சான்றது. -

எனவே, பின்னதின் முன்னது மேலதும் சிறப்பினதும் என்றார். 4. இதுவும் இல்வாழ்வானின் மேன்மை கூறியது. O

சசு. அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. . . . 49

பொருள் கோள் முறை : இயல்பு

பொழிப்புரை தமிழியல் முறைப்படி பொது நலவுணர்வாகிய அறம் எனச்