பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

அ - 2 -1 -இல்லறவியல் - 5

பொதுவில் இழிவு கூறுவது. - பழி - பழு, பழுது என்னும் சொல்லடியாகப் பிறந்த சொல். பழுது - குற்றம், உறுப்புக்குறை, உணர்வுக்குறை, அறிவுக்குறை, ஒழுக்கக்குறை, இயக்கக்குறை முதலியவற்றை எடுத்துச் சொல்லி இழிவுரைப்பது பழி. .

- பிறன், பழிப்பதில்லர்யின் நன்று' என்று கூறியதால், பிறன் பழிப்பது நன்றன்று என்னும் துணைக் கருத்துப் புலப்படும்படியும் கூறினார் என்க. நன்று என்னும் நேர் கருத்தும், நன்றன்று என்னும் துணைக்கருத்தும், பழியினது ஆழத்தையும் அகலத்தையும் பொறுத்தும், அதன் பொய், மெய் குறித்தும் ஆய்வுக்குரிய தன்மையையும் உணர்த்தியதுடன், அவ்வாறு ஆழ அகலமற்ற பொய் பழிகளால் கவலவேண்டாது, அவற்றை வலிதே கருதிச் சீர்குலையாது, எளிதே கருதி எள்ளித் தவிர்க்க என்னும் உளவும் கூறினார் என்க. இஃது, இல்வாழ்க்கையின் பெருமைச் சிறப்பையும், அதில் குறைவருமாயின் நேரும் இழுக்கையும் கூறியதாம் என்க. என்னை? அறமே இல்லறம் என்றதால், அனைத்து இல்லறமுமே சிறப்பாகி விடாது என்பதையும், அது பிறன் பழிப்புக்கு ஆளாகாமல் இருப்பதுதான் சிறப்பு என்பதையும் வேறுபடுத்தி விளக்கியதும்

என்க. O

ரு0. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும். 50

பொருள் கோள் முறை : இயல்பு

பொழிப்புரை சுழற்சியுடைய இவ்வுலகத்துள் இல்வாழ்க்கையின் அமைந்து, வாழ்கின்ற நெறிமுறைகளின்படி வாழ்கின்றவன், வானின் கண் உறைவதாக ஏற்கனவே நம்பிக் கொண்டிருக்கும் தெய்வங்களின் வரிசையுள் வைத்துப் போற்றப் பெறுவான்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. வையம் - சுழற்சியுடைய உலகம். வையம் எனல் வட்டையாகிய